சில பிக்குகளின் நடவடிக்கை நாட்டிற்கு அவமானம் – அரசாங்கம்
உத்தேச சட்டம் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மஹாநாயக்க தேரர்கள் இதுவரையில் தங்களது பரிந்துரைகளை முன்வைக்க வில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.மஹாநாயக்க தேரர்களின் ஆலோசனை பரிந்துரைகள் கிடைக்கப் பெற்றால் பாராளுமன்றில் சட்டத்தை சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் நிர்க்கதியில்..
யுத்தத்தில் இடம்பெயர்ந்து இந்தியா சென்று மீண்டும் நாடு திரும்பியும் நிம்மதியின்றி வாழ்வதாக வவுனியா பாரதிபுரத்தில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கொட்டகைகளில் வாழும் 20 இற்கும் மேற்பட்ட குடும்பங்கைளச் சேர்ந்த மக்களை சந்தித்தபோதே அவர்கள் தமது துயரத்தை சொல்லியழும் நிலையை காணமுடிந்திருந்தது.
மேலும் அம் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
‘அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை நாம் இந்தியாவில் இரந்தபோது அனைத:து உதவிகளும் வழங்கப்படும் நாடு தீரும்புங்கள் என பல ஆசை வார்த்தைகளை கூறினார்கள் அதனை நம்பி நாம் நாடு திரும்பிய நிலையில் எவ்வித உதவியும் இன்றி நட்டாற்றில் விடப்பட்டுள்ள உணர்வில் உள்ளோம்’ எனத் தெரிவித்தனர். இதேவேளை இந்திய வீடடுத்திட்டத்தில் தமக்கு வீடோ மலசலகூடமேமா வழங்குவதற்கு எவரும் முன்வரவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten