[ வியாழக்கிழமை, 08 மே 2014, 07:35.15 AM GMT ]
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி,
பேஸ்புக்கில் தனக்கு 3 லட்சம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் டுவிட்டரில் 25 ஆயிரம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்படி இருக்கையில் ஏன் சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்று திறனாளி இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,
குறித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் இலங்கை இந்த கொள்கையை கடைபிடிக்கும்.
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதற்கைமைய செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்புக்களில் 3% மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளதாகவும் மாற்று திறனாளிகளுக்கு 250,000 ரூபா வீட்டுக் கடன் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இரண்டாம் இணைப்பு-
வடக்கு இளைஞர், யுவதிகள் கடந்த கால யுத்தம் காரணமாக சகல உரிமைகளையும் பறிகொடுத்துள்ள நிலையில் அவர்களை மீள வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அதிகூடிய சித்திகளை வட மாகாண மாணவர்களே பெற்றனர்.
இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளதாக டுவிட்டர் ஊடாக விவாதத்தில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற உலக இளைஞர் மாநாட்டின், ஆரம்ப நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி, இந்த டுவிட்டர் விவாதத்தில் கலந்துக் கொள்ளுமாறு அந்த மாநாட்டில் பங்கேற்ற இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்தநிலையில், இன்று மதியம் இடம்பெற்ற விவாதத்தின் போது, இளைஞர் கல்வி, தொழில் மற்றும் பெண்களை சக்திப்படுத்துவதற்கான திட்டங்கள் என்பன தொடர்பிலே பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், பல்கலைகழக மாணவர்களுக்காக வழங்கப்படும், மஹாபொல புலமைப்பரிசில்களை அதிகரிக்க அவதானம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjr1.html
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் புழல் சிறையில் அடைப்பு
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 10:23.14 AM GMT ]
இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேன் கடந்த மாதம் 30–ந் தேதி கைது செய்யப்பட்டார். இவர் பிடிபட்ட மறுநாள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தது.
இது பற்றி விசாரணை நடத்துவதற்காக ஜாகீர் உசேனை கியூ பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இன்றுடன் ஜாகீர் உசேன் காவல் முடிவடைந்தது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் எழும்பூர் 13வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சிவசுப்பிர மணியன் முன்பு ஜாகீர் உசேன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வருகிற 13–ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து ஜாகீர் உசேன் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
போலீஸ் காவலின் போது குண்டு வெடிப்பு தொடர்பாக ஜாகீர் உசேனிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் அதுபற்றியெல்லாம் எனக்கு தெரியாது. உளவு பார்க்கவே நான் வந்தேன் என்று திரும்ப திரும்ப கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலேயே சென்னை வந்ததாகவும் இங்கு தீவிரவாதிகள் தங்குவதற்கு வீடுகள் பார்த்து வந்ததாகவும, ஜாகீர் உசேன் ஏற்கனவே கூறியிருந்தார்.
சென்னையில் அமெரிக்க தூதரகம், பெங்களூரில் இஸ்ரேல் தூதரகம், கொச்சி, விசாகப்பட்டினத்தில் கப்பல் படை தளங்கள் ஆகியவற்றை தகர்க்க அவர் திட்டமிட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக ஜாகீர் உசேனிடம் நூற்றுக் கணக்கான கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஜாகீர் உசேன் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
ஜாகீரின் பின்னணியில் இயங்கியவர்கள் யார்? தூதரக அதிகாரிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு? ஆகியவை குறித்து விரிவாக விசாரித்து வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறும் போது,
ஜாகீர் உசேன் தெரிவித்துள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம் என்றார். ஜாகீர் உசேனிடம் இருந்த ஏராளமான தகவல்களை திரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் தான் அவரிடம் 9 நாட்கள் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டனர்.
ஆனால் 3 நாட்கள் மட்டுமே அனுமதி கிடைத்தது. இதில் எதிர்பார்த்த அளவுக்கு அவரிடமிருந்து தகவல்களை பெற முடியவில்லை. இதனால் மீண்டும் ஒருமுறை ஜாகீர் உசேனை காவலில் எடுக்கவும் போலீசார் திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjr6.html
Geen opmerkingen:
Een reactie posten