தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 mei 2014

பாஸ்போட் தொலைந்ததால் கனடாவில் இருந்து இலங்கை பெண் நாடு கடத்தல் !


மனித உரிமை மட்டுமல்ல நீதி,நியாயம் கூட கனடாவில் உள்ளதாமே!

ஜனீனா என்னும் 29 வயதுப் பெண்ணை கனேடிய குடிவரவு அதிகாரிகள் இலங்கைக்கு நாடுகடத்த உள்ளார்கள்.. ஜனீனா தனது 15 வயதுமுதல் கனடாவில் வசித்து வருகிறார். கடந்த 14 வருடங்களாவ அவர் கனடாவில் வசித்தது மட்டுமல்ல, அவர் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து அவருக்கு 2 பிள்ளைகள் கூட இருக்கிறார்கள். இருப்பினும் கனடாவில் உள்ள இமிகிரேஷன் காரியாலயத்தில், அவரது இலங்கை பாஸ்போட்டை காணவில்லை என்று கூறியுள்ளார்கள். அதாவது அகதிகள் அந்தஸ்த்து கோரினாலோ இல்லை என்றால் நீண்ட நாட்களாக ஒரு நாட்டில் தங்கியிருந்தாலோ அதற்கான ஆதாரத்தை நாம் , அன் நாட்டில் உள்ள இமிகிரேஷன் அலுவலகத்திற்கு காட்டவேண்டும். அவ்வாறு எமது ஆவணத்தை அனுப்பும்வேளை அவர்கள் அதனை தமது அலுவலகத்தில் தற்செயலாக தொலைத்துவிடுவார்கள்.

பின்னர் நாமே அதற்கு பொறுப்பு என்று கூறி, எம்மை பலிகடா ஆக்குவார்கள். இமிகிரேஷன் அலுவலகத்தில் இவ்வாறு பல தமிழர்களது ஆவணங்கள் தொலைந்துபோய் இருகிறது. அதுபோலவே ஜனீனாவுக்கும் நடந்துள்ளது. இருப்பினும் வன்கூவருக்கு அருகில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே காத்திருந்த பொலிசார், அவரை திடீரெனக் கைதுசெய்து, கனடாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த உள்ளார்கள்.கணவரின் வேண்டுகோளையும் அவர்கள் ஏற்க்க மறுத்துவிட்டார்கள். இவை அனைத்திற்கும் ஆவணம் தொலைந்துபோனதே காரணம் ஆகும். இருப்பினும் கனேடிய பிரஜை ஒருவரை மணம் முடித்து 2 பிள்ளைகளையும் பெற்று, அன் நாட்டில் சுமார் 14 வருடம் குடியிருந்த , பெண் ஒருவரை இவ்வாறு திடீர் என்று எவ்வாறு நாடுகடத்த முடியும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பாஸ்போட் தொலைந்தால், குறித்த நபர் அன் நாட்டில் எத்தனை வருடம் இருந்துள்ளார் என்று கண்டறிய முடியாத நிலை தோன்றுமா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6813

Geen opmerkingen:

Een reactie posten