தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 mei 2014

போரில் இறந்த உறவுகளுக்காக தனிப்பட்டவர்களின் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி!- இராணுவம்


தென்னாபிரிக்க ரமபோஸா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்! அவரின் மத்தியஸ்தம் ஏற்கமுடியாது!- ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 12:52.13 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த தென்னாபிரிக்க மத்தியஸ்தரை ஏற்றுக்கொண்டமை அரசாங்கத்தின் மற்றும் ஒரு முட்டாள்தனமான செயல் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்தஸ்ரீ வர்ணசிங்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்
இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் முகமாக தென்னாபிரிக்காவின்  விசேட பிரதிநிதி  சிறில் ரமபோஸா விரைவில் இலங்கை வரவுள்ளார்.
இந்த சிறில் ரமபோஸா விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்.
எனவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமானது ஏற்புடையதல்ல என்று நிசாந்தஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தென்னாபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு முறையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதும் ஏற்புடையதல்ல என்று நிசாந்தஸ்ரீ தெரிவித்துள்ளார்.
போரில் இறந்த உறவுகளுக்காக தனிப்பட்டவர்களின் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி!- இராணுவம்
[ திங்கட்கிழமை, 12 மே 2014, 12:26.17 AM GMT ]
விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான போரின் போது உயிரிழந்தவர்களுக்காக சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.  எனினும் பொது நிகழ்வுகளுக்கே அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இராணுவ பேச்சாளர் நுவன் வணிகசூரிய இதனை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
போரில் உயிரிழந்தவர்களுக்காக தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்த அனுமதியுண்டு எனினும் பொதுநிகழ்வுகளை நடத்தமுடியாது என்று வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் கொடிகளை தாங்கியிருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை 2009ம் ஆண்டு போர் வெற்றியை இந்த தடவை எதிர்வரும் 18 ம் திகதி மாத்தறையில் கொண்டாட இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten