தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 13 mei 2014

முல்லைத்தீவில் பிளான் பண்ணி வெடி விபத்தை ஏற்படுத்தியவர்கள் கைது !


புத்தரை தோண்டி எடுக்க அமெரிக்கா 100 ஆயிரம் டாலர்களை கொடுத்துள்ளது !
13 May, 2014 by admin


இலங்கையில் பெளத்தவாதிகள் பெரும் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடும் இனவாதப் போக்கை கொண்ட இந்த புத்த பிக்குகள், இந்து ஆலயங்களை முதலில் இடித்தார்கள். தற்போது முஸ்லீம்களின் பள்ளிவாசல்களையும் இடித்தும் மற்றும் சேதப்படுத்தியும் வருகிறார்கள். இவர்கள் கிறீஸ்தவ தேவாலயங்களை கூட விட்டுவைக்கவில்லை. இன் நிலையில் பழமையான புத்த பீரான் சிலை ஒன்றை தோண்டி எடுப்பதாகவும், அவ்விடத்தில் பல புத்த இலச்சினைகளும் தொல்பொருட்களும் உள்ளதாக கூறி இலங்கை பெளத்த சங்கம் அகழ்வாராட்சிகளை நடத்தி வருகிறது. ராஜகால பெளத்த புராதன இடம் என்று இதனை அழைத்து வருகிறார்கள். இந்த இடத்தில் புதையுண்டு உள்ள புத்த பிரான் சிலை ஒன்றையும் மேலும் பல புராதன பொருட்களையும் வெளியே எடுக்க என அமெரிக்க அரசாங்கம் சுமார் 100 ஆயிரம் டாலர்களை சன்மானமாகக் கொடுத்துள்ளது.

இலங்கையில் யுத்தத்தால் நாசமான கோவில்களை புதுப்பிக்க, புத்த பிக்குகளால் தாக்கப்பட்ட இந்து, முஸ்லீம் மற்றும் கிறீஸ்தவ கோவிகலை புணரமைக்க அமெரிக்கா விரும்ப வில்லை. ஆனால் புத்த புராதன சின்னங்களை தோண்டி எடுக்க மட்டும் இவர்கள் சிங்களவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். புகைப்படங்கள் இணைப்பு !

முல்லைத்தீவில் பிளான் பண்ணி வெடி விபத்தை ஏற்படுத்தியவர்கள் கைது !
13 May, 2014 by admin
காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே முல்லைத்தீவு, முள்ளியவளையில் கடந்த 5ஆம் திகதி பெரும் கடை தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரையும் அங்கு பணி புரிந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதிகாலையில் பெரும் வெடிச்சத்தத்துடன் கடை வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்து நாசமானது. குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக வெடிப்பு நிகழ்ந்ததா என்ற கோணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் முதலில் விசாரணைகளை நடத்தி வந்தனர். ஆனால் இது காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட நாசவேலை என்று தெரியவந்துள்ளது என அவர்கள் இப்போது கூறுகின்றனர். அதிக கடன் சுமையைச் சமாளிப்பதற்காக இந்த நாச வேலையில் அவர்கள் இறங்கியருக்கலாம் என்றும் பொலிஸார் கூறினர்.

70 லீற்றர் பெற்றோலினை வாங்கி அதைக் கடையின் உள்ளே ஊற்றி தீ வைக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். பெற்றோல் வாங்கப்பட்ட எரிபொருள் நிலையத்தைத் தாம் கண்டறிந்துள்ளனர் என்றும் அவர்கள் கூறினர். கடை உரிமையாளரான புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் திலீபன் (வயது 24) இந்தத் திட்டத்தைத் தீட்டியவர் என்றும் கடையில் பணியாற்றிய உடுத்துறையைச் சேர்ந்த நிதர்சன் (வயது 24) அதனை நிறைவேற்றினார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

கடை முழுவதும் பெற்றோலை ஊற்றி கடைக்குத் தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக நிதர்சனின் இரு கால்களிலும் பரவி எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதனை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிதர்சனும் கடை உரிமையாளர் திலீபனும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் ஏதும் இருக்கிறதா என்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே எரிந்தழிந்த கடைக் கட்டடத்தினதும் அதன் அருகே இருந்து சேதமடைந்த வீட்டினதும் உரிமையாளரான முள்ளியவளையைச் சேர்ந்த இராசையா உருத்திரமூர்த்தி தனது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தார்கள் என்று அவர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்தில் அவரது கடை முற்றாக அழிந்துபோனதுடன் அதனருகில் இருந்த அவரது வீடும் பெருமளவில சேதமானது.


கொன்சலிற்றா தற்கொலை வழக்கு: பாதிரிமார் இருவரும் நேற்று ஆஜர் !
13 May, 2014 by admin
கொன்சலிற்றா தற்கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் பாதிரிமார் இருவரும் நேற்று(12) நீதிமன்றத்திற்கு சமுகமளித்திருந்தனர். கொன்சலிற்றா தொடர்பிலான வழக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி பி.சிவகுமார் முன்னிலையில் நேற்று காலை எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த விசாரணையின்போது பாதிரிமார் இருவரையும் மன்றிற்கு சமுகமளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். எனினும் அவர்கள் மன்றிற்கு சமுகமளிக்கவில்லை.
அதனையடுத்து குறித்த பாதிரிமார் இருவரையும் நேற்று பிற்பகல் மன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு, வழக்கை பிற்பகல் வரை ஒத்திவைத்தார். அதனையடுத்தே கொன்சலிற்றாவின் சாவுடன் சந்தேகிக்கப்பட்ட பாதிரிமார் இருவரும் மன்றில் முன்னிலையாகி சாட்சியம் அளித்தனர்.

எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை” என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். பாலியல் ரீதியாக பாதிரியார்கள் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிரியார்கள் சார்பாகச் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், மு.றெமீடியஸ் ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமா க மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Geen opmerkingen:

Een reactie posten