தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 mei 2014

வெளிநாடுகளுக்கு புலனாய்வாளர்களை அனுப்பவில்லை!– பாதுகாப்பு அமைச்சு

வெள்ளை வானில் என்னைக் கொல்ல துரத்துகின்றனர்!– வட்டரக்கே விஜித தேரர்
[ சனிக்கிழமை, 03 மே 2014, 12:00.12 AM GMT ]
வெள்ளை வான் ஒன்றில் சிலர் தம்மைக் கொலை செய்யத் துரத்தி வருவதாக ஜாதிக பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்கே விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
நான் செல்லும் இடங்களை வெள்ளை வான் ஒன்று பின் தொடர்கின்றது.
இது தொடர்பில் தெமட்டகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
தம்மை பின்தொடர்ந்த வாகனத்தின் இலக்கம் போலியானது என்பதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டு பிடித்துள்ளனர் என சிங்கள ஊடகமொன்றுக்கு விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை வட்டரக்கே விஜித தேரர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYms6.html

புலனாய்வுப் பிரிவினர் இரண்டு மடங்காக அதிகரிப்பு! பாதுகாப்பு குறித்து அஞ்சத் தேவையில்லை!- இராணுவத் தளபதி
[ சனிக்கிழமை, 03 மே 2014, 12:06.34 AM GMT ]
இராணுவப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
போர் இடம்பெற்ற 30 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பீடு செய்யும் போது புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயங்கரவாதத்தின் நிழலைக் கூட தோன்ற அனுமதிக்கப்பட மாட்டாது.
அண்மையில் கோபி உள்ளிட்ட புலித் தலைவர்களை நெடுங்கேணியில் கொலை செய்வதற்கு சரியான புலனாய்வுத் தகவல்களே காரணமாகியது.
இராணுவ புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பே புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த வழியமைத்தது.
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் படையினர் நூறு வீத அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.
இதனால் மக்கள் பாதுகாப்பு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTXLYms7.html
வெளிநாடுகளுக்கு புலனாய்வாளர்களை அனுப்பவில்லை!– பாதுகாப்பு அமைச்சு
[ வெள்ளிக்கிழமை, 02 மே 2014, 11:50.24 PM GMT ]
விடுதலைப் புலிகளுடன்  தொடர்புடைய சர்வதேச அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடகத் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 18 புலனாய்வு அதிகாரிகள் 18 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று வெளியிட்டிருக்கும் செய்தியை மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அவ்வாறான எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லையென்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு பேரவையின் சரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 40வது சரத்தின் கீழ் விடுதலைப் புலிகள்  மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
எனினும் இதனை மறுத்துள்ள பாதுகாப்பு அமைச்சு, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மீதான தடை குறித்து விளக்கப்படுத்துவதற்காக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டார்களே தவிர, புலனாய்வு அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கும் இந்த அச்சுறுத்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyFTWLYms5.html

Geen opmerkingen:

Een reactie posten