தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 22 mei 2014

கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் படைப் புலனாய்வு பிரிவினரால் கைது

கிளிநொச்சியில் 19 வயது இளைஞன் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 11:43.37 AM GMT ]
கிளிநொச்சி திருவையாறு அம்பாள் நகரைச் சேர்ந்த விஜயகுமார் கேதீஸ்வரன் என்ற 19வயது இளைஞன் நேற்று இரவு 8.50 மணியளவில் அவரது வீட்டில் வைத்து ரி.ஜ.டி எனப்படும் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
1994ம் ஆண்டு பிறந்த இவர் வன்னியில் போர்க்காலத்தில் சிறிய பள்ளி மாணவனாகவே இருந்துள்ளார்.
இவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என உறுதிபட தெரிவிக்கப்படுகின்றது.
நைற்றா எனப்படும் தொழிற் பயிற்சி நிறுவனத்தில்  கல்வி பயின்ற இவர், பின்பு அசோக் லேலண்ட கம்பினியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், தனது தாயின் பிறந்த நாளுக்காக வீட்டுக்கு வந்தபொழுது ரி.ஜ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வயது வேறுபாடின்றி ரி.ஜ.டியினரால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கைதுகளால், தமிழர் வாழும் பகுதிகள் அச்சமும் நிம்மதி இழந்து நிலையுடனும் காணப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmx1.html

கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண் படைப் புலனாய்வு பிரிவினரால் கைது
[ வியாழக்கிழமை, 22 மே 2014, 09:27.21 AM GMT ]
கிளிநொச்சியில் மேலும் ஒரு பெண், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார்.
பத்மாவதி என்ற 64 வயதுடைய மூதாட்டியே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள காவல்துறை பேச்சாளர், அதற்கான பணத்தை விடுதலைப் புலிகளே இந்தப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.
இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்காகவே இந்த வயதான பெண் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவர் தற்போது பயங்கரவாதப் புலனாய்வு பிவிரினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகக் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்திருக்கின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRWLZmxy.html

Geen opmerkingen:

Een reactie posten