தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தகவல், உடனடிப் பகிர்வு

தடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட பதினாறு புலம்பெயர் இயக்கங்கள் மற்றும் 424 தனிப்பட்ட நபர்கள் தொடர்பிலான தகவல்களை வெளிநாடுகளுடன் பகிர்ந்துள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த இயக்கங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். விரிவான விசாரணைகளின் பின்னர் பட்டியல் படுத்தப்பட்டுள்ள தனிப்பட்ட நபர்கள் அல்லது இயக்கங்கள் குற்றமற்றவை என கண்டு பிடிக்கப்பட்டால் பட்டியலிருந்து நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளின் பின்னர் முழு அளவிலான ஆதாரங்ககளும் இணைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
04 May 2014

Geen opmerkingen:

Een reactie posten