[ வியாழக்கிழமை, 08 மே 2014, 07:35.15 AM GMT ]
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி,
பேஸ்புக்கில் தனக்கு 3 லட்சம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் டுவிட்டரில் 25 ஆயிரம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்படி இருக்கையில் ஏன் சமூக வலைத்தளங்களை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்று திறனாளி இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு,
குறித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சட்ட விதிகள் உள்ளதாகவும் இலங்கை இந்த கொள்கையை கடைபிடிக்கும்.
மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து உயர் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதற்கைமைய செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் காணப்படும் வேலை வாய்ப்புக்களில் 3% மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என சட்டம் உள்ளதாகவும் மாற்று திறனாளிகளுக்கு 250,000 ரூபா வீட்டுக் கடன் வழங்கப்படுவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjr1.html
விடுதலைப் புலிகள் தீவிர செயற்பாட்டில்: அமெரிக்க அறிக்கையை ஆதாரம் காட்டுகிறது இலங்கை
[ வியாழக்கிழமை, 08 மே 2014, 07:17.01 AM GMT ]
சில புலம்பெயர் அமைப்புக்கள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி பெறப்படுவதாகவும் இலங்கை தெரிவித்துள்ளது.
இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் சர்வதேச அளவில் அச்சுறுத்தலாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பெருந்தொகையான புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஆயுதங்கள், தகவல் தொடர்பு, நிதி மற்றும் ஏனைய தேவையான பொருட்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வாங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
புலிகள் தங்கள் வேலைகளுக்கு நிதி சேகரிப்பதுடன், தொண்டு வேலை என திசை திருப்ப முனைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் பல தனிநபர்களை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது.
இதுவரை கனடா மட்டுமே இந்தப் பட்டியலை ஏற்க முடியாது என மறுத்து வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyFTcLYjr0.html
Geen opmerkingen:
Een reactie posten