காங்கிரஸ் முக்கியஸ்தரின் காதல் லீலைகள் அம்பலம்! அதிர்ச்சியில் தலைவர்கள்
67 வயதான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங்கிற்கும், 43 வயதான தொலைக்காட்சி பெண் நிருபர் அம்ரிதாராய்க்கும் காதல் மலர்ந்தது. இதை இருவருமே ருவிற்றர் இல் ஒப்புக் கொண்டனர். திக்விஜய்சிங்கின் மனைவி ஆஷா, புற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டு இறந்தார். அவருக்கு 4 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.
மகன் ஜெய்வர்தன், மத்தியபிரதேசம் ரகோகார் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். அவரிடம் தந்தையின் காதல் திருமண விஷயம் குறித்து கேட்டபோது, ‘இது எனது அப்பாவின் சொந்த விஷயம். அதுகுறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. என்னுடைய அப்பாவுக்கு எனது முழு ஆதரவு உண்டு’ என்று ஜெய்வர்தன் பதில் அளித்தார்.
http://www.jvpnews.com/srilanka/67858.html
சென்னையில் உளவு பார்த்த இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகம்! திடுக்கிடும் தகவல்
சென்னையில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் ஆதரவு உளவாளிக்கு தூண்டுதலாக செயல்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள், என்று தெரிகிறது. அது தொடர்பாக, கியூ பிரிவு பொலிஸாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
அவர் தமிழகத்தை சேர்ந்தவர். ஆனால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள, உளவாளி ஜாகீர்உசேன், இலங்கையை சேர்ந்தவர். அவருக்கு அடைக்கலம் கொடுத்து, சென்னையில் யாராவது பின்னணியில் செயல்பட்டு இருக்க வேண்டும் என்று பொலிஸார் கருதுகிறார்கள். அவர்கள் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஏற்கனவே திருச்சியில் கைது செய்யப்பட்ட, பாகிஸ்தான் உளவாளி தமீம்அன்சாரிக்கும், தற்போது பிடிபட்டுள்ள ஜாகீர்உசேனுக்கும் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு உள்ளது.
ஏற்கனவே ஜாகீர்உசேன், திருச்சியில் போலி பாஸ்போர்ட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார். பின்னர் விடுதலையாகி வெளியில் வந்தவர், இலங்கை தப்பிச் சென்று விட்டார். திருச்சியில் இவர் தங்கி இருந்த போது, தமீம் அன்சாரியுடன் சேர்ந்து ஏற்கனவே உளவு வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு உள்ளது.
ஜாகீர்உசேனுக்கு, பின்னணியில் செயல்பட்ட இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த தூதரக அதிகாரிகளுடன், ஜாகீர்உசேன் வைத்திருந்த தொடர்பு சம்பந்தமான ஆதாரங்களை பொலிஸார் திரட்டி வருகிறார்கள்.
மேலும் அமெரிக்க தூதரகம் தொடர்பாக எடுத்த புகைப்படங்களை, ஜாகீர்உசேன் இ.மெயில் மூலம், இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு அனுப்பி உள்ளார். அது தொடர்பான இ.மெயில் ஆதாரங்களையும் பொலிஸார் திரட்டி வருகிறார்கள்.மேலும் ஜாகீர்உசேன் வைத்திருந்த இரண்டு, செயற்கைகோள் செல்போன்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த செல்போன் மூலம், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன், ஜாகீர் உசேன் பேசி இருக்கிறார். இதுபற்றிய ஆதாரங்களும் திரட்டப்படுகிறது. உரிய ஆதாரங்கள் கிடைத்தவுடன், பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவரையும் கைது செய்ய, கியூபிரிவு பொலிஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.
அந்த வழக்கில் சென்னையில் மேலும் 3 பேரை பிடித்து கியூபிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உளவாளி ஜாகிர் உசேனுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/67870.html
Geen opmerkingen:
Een reactie posten