[ புதன்கிழமை, 21 மே 2014, 06:55.07 AM GMT ]
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
அயல் நாட்டில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அயல்நாட்டுடன் எப்போதுமே சுமுக உறவை விரும்பும் இலங்கை, அந்த உறவையும் நட்பையும் பலப்படுத்துவதையே விரும்புகிறது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுவதன் மூலம் இந்தியாவின் புதிய ஆட்சிப் பீடத்துடன் ஒரு நெருக்கமான உறவைத் தொடர்வதற்கும், இருதரப்பு ஊடாட்டத்தைப் பலப்படுத்துவதற்கு முடியும் என கொழும்பு கருதுகின்றது என இவ்விடயங்களுடன் சம்பந்தப்பட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்களன்று மாலையில் புதுடெல்லியின் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுகின்றது.
தற்சமயம் சீனாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி, அங்கிருந்து திரும்பிய பின்னர், புதிய இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில் பங்குபற்றுவதற்காகப் புதுடெல்லி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தப் பதவியேற்பு நிகழ்வில் பங்குபற்றுமாறு இலங்கை உட்பட அனைத்துத் தென்னாசிய நாடுகளின் தலைவர்களுக்கும் புதுடெல்லி அழைப்பு அனுப்பியிருப்பதாக அறியவந்திருக்கிறது.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZmr0.html
பான் கீ மூனை இலங்கைக்கு வருமாறு மகிந்த நேரில் அழைப்பு
[ புதன்கிழமை, 21 மே 2014, 12:07.07 PM GMT ]
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை மீண்டுமொரு முறை இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சீனாவின் சங்காய் நகரில் நடைபெறும் ஆசிய நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள நிலையிலேயே, ஐ.நா பொதுச் செயலாளரைச் சந்தித்து இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
2009ம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் இலங்கையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்திகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதி விளக்கியுள்ளார்.
இலங்கைக்கு மற்றொரு விஜயத்தை மேற்கொண்டு இந்த அபிவிருத்திகளைப் பார்வையிடுமாறும் ஜனாதிபதி இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதில் காணப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு எடுத்துக் கூறிய ஜனாதிபதி மகிந்த, இந்தப் பரிந்துரைகளில் 30 வீதமானவை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
போர்க் காலத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள் குறித்து உள்ளூர் விசாரணைகளை முன்னெடுப்பதில் அரசாங்கம் உறுதியாகவிருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, சர்வதேச விசாரணையை ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு பான் கீ மூன் ஜனாதிபதிக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRVLZms2.html
Geen opmerkingen:
Een reactie posten