பதவி உயர்வுகள் தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து இவ்வாறு உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
218 பொலிஸ் பரிசோதகர்களுக்கு பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பெண் பொலிஸ் பரிசோதகர்களும் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த பதவி உயர்வுகளை ரத்து செய்யுமாறு கோரி நேற்று உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 75 உப பொலிஸ் பரிசோதகர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் உப பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏழு ஆண்டுகள் உப பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றிய பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகத் தெரிவித்து அபராதம் விதிக்கப்பட்டு, ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வரும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர், சட்டம் ஒழுங்க அமைச்சின் செயலாளர், பதவி உயர்வு பெற்றுக்கொண்ட 129 உப பொலிஸ் பரிசோதகர்கள் உள்ளிட்டவர்கள் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten