தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 mei 2014

ஜனாதிபதிக்கு அனுப்பபட்ட கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை!– அமைச்சர் பௌசி


முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தாம் கைச்சாத்திடவில்லை என்று, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
எனினும் முஸ்லிம் பேரவையால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தமது கையழுத்தும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தாம் முஸ்லிம் பேரவையிடம் விளக்கம் கோரவிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா போன்ற அமைப்புகள் நடத்துகின்ற தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கோரி இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் அமைச்சர் ரவுப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, றிசாட் பதியுதீன் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYlo4.html#sthash.E4SOcpDY.dpuf

Geen opmerkingen:

Een reactie posten