பொதுமக்களை பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிற்கும் படி பொலிஸ் நிலைய வாயிலில் வைத்து குறித்த சந்தேகநபரை பொதுமக்களுக்கு காட்டிவிட்டு மல்லாகம் நீதிமன்றத்திற்கு; பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி அச்சுவேலி பொலிஸ் நிலையத்தினைச் சூழ்ந்து கொண்ட மக்களினால் பொலிஸ் நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
மல்லாகம் நீதிமன்றத்திலும் பெருமளவு பொதுமக்கள் சூழ்ந்திருப்பதினால், அங்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/68106.html
Geen opmerkingen:
Een reactie posten