திருமலையில் சிங்கள குடும்பத்தினருக்கு நடந்த சோகம்... |
திருகோணமலை அருள்மிகு ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் நேர்த்தி கடன் காரணமாக பொங்கல் பொங்கிய சிங்களக்குடும்பத்தினர் பொங்கலை இடைநடுவில் கைவிட வேண்டிய சூழல் நேற்றுக்காலை ஏற்பட்டது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தைச்சார்ந்த சுமார் 7 பேர் தமது குடும்ப நேர்த்திக்கடன் காரணமாக காலை 7.00மணியளவில் மூன்று பானைகளில் பொங்கல் செய்து கொண்டிருந்தனர்.ஒரு பொங்கல் நிறைவடைந்த நிலையில் ஏனைய இரண்டு பொங்கல் பானைகளும் அடுப்பில் இருந்தன. இதனைக்கேள்வியுற்று அங்கு வந்த சில இராணுவத்தினர் குறித்த பொங்கலை நிறுத்துமாறு கோரினர். இன்றைய நாளில் பொங்கல் செய்யமுடியாது எனவும் தெரிவித்தனர். இதனை ஏற்காத அந்தக்குடும்பத்தினர் தமது நிலமைகளை விளக்கப்படுத்தியதுடன் தமது குடும்ப நேர்த்திக்கடனுக்காகவே இந்தப்பொங்கலை செய்வதாகவும் சற்று நேரத்தில் முடித்து சென்று விடுவோம் எனவும் வேண்டினர் அதனை ஏற்றுக்கொள்ளாத படையினர் குறித்த பொங்கலை அகற்றுமாறு கடுமையாக அறிவுறுத்தியதுடன் அடுப்பில் நீரையும் உற்றி அணைத்தனர். இந்த நிலையில் பெரும் ஏமாற்றதுடன் குறித்த சிங்கள குடும்பத்தினர் அரைகுறையாக அவிந்த பொங்கலையும் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் அதிகளவிலான சிங்கள மக்களும் வழிபடுவது வழமையாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் நேற்று என்பதால் ஆலயங்களில் பொங்கல் பொங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே. |
20 May 2014 |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 20 mei 2014
பொங்கல் பொங்கிய சிங்களக்குடும்பத்தினர் பொங்கலை இடைநடுவில் கைவிட வேண்டிய சூழல்
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten