யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிரகாரித்துள்ளதாக மனித உரிமைப் பேரவையின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் குறிப்பிட்டுள்ளார். எனினும் யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்திற்காக காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் இலங்கையில் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்தும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதில் அரசாங்கம் கரிசனை காட்டவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார். யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/26339.html#sthash.Az23Ar8Z.dpuf
Geen opmerkingen:
Een reactie posten