கடந்த ஞாயிற்றுக்கிழமை காலில் இருந்த காயத்தினை துப்புரவுசெய்யது மருந்துகட்டுவதற்காக சிறுவன் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த விடுதியில் இருந்த வேறு ஒருவருக்கு கேணியா சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவிருந்துள்ளது.இந்த நிலையில் சத்திர சிகிச்சை செய்யவேண்டியவருக்கு பதிலாக காலில் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவனுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குறித்த சிறுவனின் தந்தை தெரிவித்தார்.
குறித்த சத்திர சிகிச்சை பகுதியில் கடமையாற்றிய ஒருவரே இதனை தடுத்துநிறுத்தியதாகவும் குறித்த சிறுவனின் தந்தை தெரிவித்தார். ஏழைய எளிய மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றிவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரு சிலரின் தவறினால் ஏனையவர்களும் பாதிப்படும் நிலையேற்படுவது தொடர்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மகன் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர் அந்த வேளையில் தொலைபேசி ஒன்றில் உரையாடிக்கொண்டே செயற்பட்டதன் காரணமாகவே இந்த தவறு நேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் வைத்தியசாலை வட்டாரங்களை தொடர்புகொள்ள முயன்றபோதிலும் தொடர்புகிடைக்கவில்லை. எனினும் பொதுமக்களின் நலன் கருதி இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் பூரண விசாரணை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது
http://www.jvpnews.com/srilanka/62275.html
Geen opmerkingen:
Een reactie posten