தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 maart 2014

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு நியூசிலாந்து ஆதரவளிக்க வேண்டும்: ஜான் லொகி

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு நியூசிலாந்து அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென, கிரீன் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஜான் லொகி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமெனக் கோரி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்ற உள்ளன. இந்த தீர்மானத்திற்கு நியூசிலாந்து அரசாங்கமும் ஆதரவளிக்க வேண்டும்.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோர நியூசிலாந்திற்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை.
குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சில விசாரணை ஆணைக்குழுக்களை நிறுவியுள்ளது. எனினும், இந்த விசாரணைகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ள முடியாது.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்போர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மனித உரிமை விவகாரங்களுக்காக குரல்கொடுக்காது நியூசிலாந்து ஒளிந்து கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSVLVhty.html

Geen opmerkingen:

Een reactie posten