தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 maart 2014

அவுஸ்ரேலியா, சிட்னியில் இலங்கையைச் சேரந்த தமிழ் வர்த்தகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

விசா ஈசன் ( 47 வயது) என்ற இலங்கைத் தமிழரான இவர், நேற்று இரவு இவர் இனம் தெரியாத நபர்களின் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உயிரிழந்துள்ளார்.
இவர், 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இப்படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பெண்டி ஹில் போலிசார் மேற்கொண்டுள்ளனர்.
விசேடமாக ..................
அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழரின் கொலையுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
48 வயதான விசா ஈசன் என்ற இந்த இலங்கை தமிழர் பெண்டல் ஹில் பகுதியில் உள்ள ஆஸி யூனிட்டி ரியல் எஸ்டேட் என்ற தனது வர்த்தக நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு 7.30 அளவில் கத்தி குத்துக்கு இலக்கான இவர், வெஸ்ட்மீட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 30 வயதான டுன்காப்பி நபர் பெண்டல் ஹில் நிலையத்தில் இருந்து குறைந்த ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற உடன் இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட நபர் உடனடியாக மனநல பரிசோதனைக்காக கம்பர்லேண்ட் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் தற்போது கொலை குற்றச்சாட்டின் பேரில் மேரிலேண்ட் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நன்கு அறியப்பட்ட இந்த நபர் கைது செய்யப்படும் போது இரத்த கறைகள் அவரின் உடலில் காணப்பட்டது. எனினும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருக்கவில்லை.
கொலை செய்த சந்தேக நபர் ரெயில்வே பாதையை கடந்து சென்று தன் மீது படிந்திருந்த இரத்த கறையை கழுவியுள்ளார்.
இந்த கொலைக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்கு சம்பந்தம் இருக்கின்றதா என்பது சரியாக தெரியவில்லை என ஹொல்ரொய்ட் பொலிஸ் இன்ஸ்பெக்டர் எடம் பிலிப்ஸ் கூறினார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராவிலும் சம்பவம் பற்றிய போதுமான தடயங்கள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தை தேடி வருவதாகவும் இந்த கொலையுடன் வேறு எவராவது சம்பந்தப்பட்டுள்ளனரா என்பது பற்றிய தகவல்கள் இல்லை எனவும் பதில் பொலிஸ் அத்தியட்சகர் லேன் காஷா குறிப்பிட்டார்.
அத்துடன் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலை செய்யப்பட்டதா என்பதற்கான காரணங்களும் இல்லை.
ஈசனின் குடும்பத்தினர் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக அவரது நண்பர் கூறினார். அவரது ஒரு சகோதரி தந்தையுடன் வீட்டில் தனித்து வசித்து வருகிறார்.
ஈசனின் கொலை சம்பவத்தை அடுத்து அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் அந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை எனவும் ஈசனின் நண்பர் ஒருவர் கூறினார்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக ஈசனுடன் பணியாற்றும் மற்றுமொரு நண்பரான ஜோன் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் எவரும் இதனை எதிர்பார்க்கவில்லை. அவர் அதிகாலையில் வந்து ஆலயத்திற்கு சென்றிருந்தார். அதிகாலையில் அவர் தனிமையிலேயே இருப்பார் அவருக்கு உதவிக்கு எவரும் இருக்க மாட்டார்கள்.
எமது ரியல் எஸ்டேட் வர்த்தகத்திற்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. இது போதைப் பொருளுக்காக நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம்.
ஈசன் மிகவும் பிரபலமான நபர் என்பதுடன் சமூக தலைவர். அவர் நல்ல மனம் கொண்ட நபர். அனைத்து தமிழர்களுக்கும் உதவி வந்தார். நாங்கள் அனைவரும் அவரை நேசித்தோம். அவர் மிக சிறந்த நபர்.
இலங்கையில் இருந்து புதிதாக வருந்து குடியேறுவோருக்கு ஈசன் உதவி வந்தார். எனக்கும் மேலும் பலருக்கும் அவர் உதவியுள்ளார். அவர் மிகவும் அன்பார்ந்த மனிதர் என்றார்.
கொலை செய்யப்பட்ட ஈசன் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் பிறந்துள்ளார். அவரது பெற்றோரின் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தெரிவிக்கப்படுகிறது.
20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய ஈசன், தனது முதல் குழந்தை மற்றும் மனைவி சனிக்காவுடன் கெலிவைல் பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten