தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 maart 2014

வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோர முடியாதவாறு, இலங்கையில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.

ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்த்து கோர முடியாதவாறு, இலங்கையில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்படவுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்கின்ற ஈழத் தமிழர்கள் அந்த நாடுகளிலேயே அரசியல் தஞ்சத்தை கோருகின்றனர்.
இதற்காக அவர்கள் போலியான தகவல்களை வழங்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர்கள் போலியான தகவல்களை வழங்கியுள்ளமை உறுதியானதன் பின்னர், அந்த நாடுகள் அவர்களை நாடுகடத்துகின்றன.
இந்த நிலையில் அவ்வாறான நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/23362.html#sthash.4gnyc9oi.dpuf

Geen opmerkingen:

Een reactie posten