கடந்த 2011ம் ஆண்டு நொவம்பர் மாதம் 7ம் திகதி நெதர்லாந்தில் இருந்த வந்த லேக் ஒன்டேரியோ என்ற கப்பலில் குறித்த இலங்கையர் பணியாளராக இணைந்துள்ளார்.
அவர் அல்ஜீரியாவில் வைத்து இந்த பதவியில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் குறித்த கப்பல் கனடாவின் ஒசாவா துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில், அதில் இருந்து கடலில் குதித்து, ஒன்டேரியோவை சென்றடைந்தார்.
அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, நாடு கடத்த முயற்சிக்கப்பட்ட வேளையில், தமக்கு கனடவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்தார்.
எனினும் அவருக்கு கடந்த இரண்டு வருடங்களாக அகதி அந்தஸ்த்து வழங்க மறுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவரது வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர் கனடாவின் சட்டத்திட்டங்களை மீறி இருப்பதால், அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்க முடியாது என்று அரசாங்கம் தெரிவித்தது.
இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் அவர் இலங்கைக்கே நாடுகடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.canadamirror.com/canada/23298.html#sthash.SJXHhUdT.dpuf
Geen opmerkingen:
Een reactie posten