தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 7 maart 2014

இலங்கை அரசு அமெரிக்காவுக்கு நன்றிதெரிவித்தது: கடுமையான தன்மை குறைக்கப்பட்டது !


இலங்கை மீது அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணையின் கடுமை தன்மை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்பது தற்போது யாவரும் அறிந்த விடையமாக உள்ளது. ஜெனீவாவில் அமெரிக்கா இவ்வாறானதொரு பிரேரணையையே சமர்ப்பிக்கவுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, அமெரிக்க அரசின் அழுத்தம் காரணமாகவே பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தனது முடிவை மாற்றியது என்றும் மேலும் அறியப்படுகிறது. இலங்கை செல்ல முன்னர் பிரித்தானியப் பிரதமர், மிகவும் கடுமையாக இலங்கை அரசைச் சாடினார். சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்று வெளிப்படையாகக் கூறினார். ஆனால் அவர் மீண்டும் பிரித்தானியா வந்தபின்னர், அவரை பிரித்தானிய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசியுள்ளார்கள். 

அதற்கு பின்னர் அவர் அக் கூற்றை கைவிட்டுவிட்டார். இதேவேளை அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் கடுமையான தன்மை குறைக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கின்றது. இதற்கு இந்தியாவின் பங்களிப்பும் கிடைத்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. மகிந்தரின் நெருங்கிய நண்பரான வாசுதேவ நாணயக்காரவின் இக் கூற்றில் இருந்தே இலங்கை அமெரிக்க தீர்மானம் தொடர்பாக எவ்வளவு மகிழ்சியில் இருக்கிறது என்பதனை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். இத் தீர்மானத்தை பிரித்தானிய ஆழும் கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சியும் ஆதரித்துள்ளது. 

நடைபெறவுள்ள பிரித்தானிய தேர்தலில், தமிழர்களின் வாக்குகள் இனி யார்பக்கம் திரும்பும் என்பதனை நாம் சொல்லவே தேவையில்லை எனலாம்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6491

Geen opmerkingen:

Een reactie posten