தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 maart 2014

இலங்கை கேள்விகளை திட்டமிட்டு தவிர்க்கிறார் ஐக்கிய நாடுகளின் புதிய பேச்சாளர் - இன்னர் சிட்டி பிரஸ் !

ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னெப்போது இல்லாத அளவு தற்போது பக்கச்சார்புகள் அதிகரித்திருப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. 
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் புதிய பேச்சாளராக ஸ்டீவன் டுஜாரிக் பதவி ஏற்றி நேற்றுடன் 12 நாட்கள் நிறைவடைகின்றன.

நேற்றையதினம் அவரிடம் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளில் தெரிவு செய்த இரண்டு கேள்விகளுக்கு மாத்திரமே அவர் பதில் வழங்கியதாகவும் அந்த இரண்டு கேள்விகளும் இன்னர்சிட்டிபிரஷ் முன்வைத்த கேள்விகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்னர் சிட்டிபிரஷ் இலங்கை தொடர்பில் எழுப்புகின்ற எந்த கேள்விகளுக்கும் அவர் பதில் வழங்குவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை புதிய பேச்சாளர் ஸ்டீவன் டுஜாரிக் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரபிரநிதி பாலித்த கோஹன்னவின் முயற்சியில் பதவி நியமனம் பெற்றவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாவே அவர் இலங்கை தொடர்பான கேள்விகளை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது  என இன்னர்சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDRULWmoy.html

Geen opmerkingen:

Een reactie posten