தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இம்முறை மாத்தறையில் நடைபெறவுள்ளது.
போர் வெற்றியீட்டப்பட்டு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படை, விமானப் படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் ஆறாயிரம் பேர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர்.
இராணுவத்தினர் வாகனத் தொடரணியாகவும், விமானப் படையினர் விமானங்கள் ஊடாகவும், கடற்படையினர் பேரணியாகவும் இந்த நிகழ்வுகளில் பங்களிப்பு வழங்க உள்ளனர்.
பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டதனை கொண்டாடும் நோக்கில் மே மாதம் 18ம் திகதி ஒவ்வொரு ஆண்டும் போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten