தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 13 maart 2014

இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும்: பிரித்தானியா


மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ஏற்க முடியாது: மஹிந்த சமரசிங்க
[ வியாழக்கிழமை, 13 மார்ச் 2014, 02:55.54 PM GMT ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என ஜனாதிபதியின் மனித உரிமை விவகார விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொள்கை அடிப்படையில் இவ்வாறான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
மனித உரிமைப் பேரவையில் இலங்கை இன்று எதிர்நோக்கியிருக்கும் அழுத்தங்களை அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் வேறும் நாடுகளும் எதிர்நோக்க நேரிடலாம்.
எனவே, மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு அணிசேரா நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
இலங்கை சர்வதேச சமூகத்துடன் சுமூகமான உறவினைப் பேணி வருகின்றது.
இலங்கையை ஊக்கப்படுத்தும் வகையிலான தீர்மானங்களே நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSXLVgvz.html

இலங்கைக்கு எதிராக கடுமையான தீர்மானமொன்றை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்படும் என பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைப் பேரவையின் தலைமையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
கடுமையான ஓர் தீர்மானத்தை நிறைவேற்றும் நோக்கில் உறுப்பு நாடுகளின் ஆதரவு திரட்டப்பட்டு வருகின்றது.
சர்வதேச விசாரணைகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை, ஆதரவு வழங்குவதாக வெளியிட்ட கருத்து வரவேற்கப்பட வேண்டியது.
முழு அளவில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஹேக் தெரிவித்துள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSXLVgv0.html

Geen opmerkingen:

Een reactie posten