தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 10 maart 2014

புதிய போர்க்குற்ற வீடியோ !Sri Lanka: new video evidence of government war crimes


http://www.daytamil.com/2014/03/tamil_9648.html

http://www.youtube.com/watch?v=N4EpNor77MA

புதிய போர்குற்ற ஆதார வீடியோ(முழுமையான 2ம் இணைப்பு !
09 March, 2014 by admin
இன்று மாலை 6.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான, புதிய ஆவனப் படம் முழுமையாக வெளியாகியுள்ளது. இதனைக் காண இங்கே அழுத்தவும்.

புதிய போர் குற்ற காணொளி இன்று சனல் 4 கில் வெளியாக உள்ளது !
09 March, 2014 by admin
இன்று (ஞாயிறு) மாலை 6.00 மணிக்கு புதிய போர்குற்ற ஆதார காணொளி வெளியாக உள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. ஈழத்தில் 2009ம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை இலங்கை இராணுவத்தினர் இழைத்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. கைகளையும் கண்களையும் கட்டி தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் துப்பாக்கியல் சுடும் காட்சிகளை சனல் 4 ஏற்கனவே வெளியிட்டது. அது உலகில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்தது. தற்போது சில இலங்கை இராணுவத்தினர் இணைந்து குற்றுயிராய் கிடக்கும் ஒரு பெண்ணை பாலியல் சித்திரவதை செய்கிறார்கள். இக் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகவுள்ளது.

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று மாலை 6.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது. தமிழ் பெண்ணை மானபந்தப்படுத்தியும், அவரின் பிறப்பு உறுப்பின் தனது துப்பாக்கியை விட்டு , நையாண்டி செய்யும் இலங்கை இராணுவத்தின் கோர முகம் இந்த வீடியோவில் முழுமையாகப் பதிந்துள்ளது. இதில் இலங்கை இராணுவத்தில் உள்ள சிலரது முகங்களும் தெளிவாகப் பதிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. மேலும் அருகில் இறந்து கிடக்கும் மற்றுமொரு தமிழ் இளைஞனின் சடலத்தையும் இலங்கை இராணுவத்தினர் எடுத்து, துஷ்பிரயோகம் செய்கிறார்கள். ஜெனீவாவில் ஐ.நாவின் மனித உரிமை மாநாடு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் இவ்வேளையில், இலங்கை இராணுவம் இழைத்துள்ள மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவரும் ஒரு முயற்சியாகவே சனல் 4 இக் காணொளியை வெளியிடவுள்ளது.

அமெரிக்காவின் ஒன்றுக்கும் உதவாத பிரேரணையை, மேலும் கடுமையாக்கவேண்டும் என்று தமிழர்கள் ஏன் கூறுகிறார்கள் என்பதனை இந்தக் காணொளி நிச்சயம் சிலருக்கு புரியவைக்கும் என்பதில் ஐயமில்லை. 



C 4 VIDEO ::::::::::::::::::

Geen opmerkingen:

Een reactie posten