தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 maart 2014

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் இராணுவம் பங்கேற்கத் தடை !

வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் இராணுவம் பங்கேற்கத் தடை விதிக்கும் வகையில் மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
வட மாகாணசபையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு பாடசாலைகளில் மற்றும் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் படையினரை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் இந்த உத்தேச தீர்மானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணசபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானத்தின் தலைமையில் இந்த உத்தேச தீர்மானம் வரையப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் பாடசாலை நிகழ்வுகளுக்கு படையினரை அழைக்க வேண்டாம் என பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட உள்ளது.
அண்மையில் நடைபெற்ற பாடசாலை நிகழ்வு ஒன்றின் போது இராணுவ அதிகாரியொருவர் தேசிய கொடியை ஏற்றிய காரணத்தினால் இவ்வாறு தடை விதிக்கப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://links.lankasri.com/tamilwin

Geen opmerkingen:

Een reactie posten