தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 maart 2014

பான் கீ மூனின் புதிய பேச்சாளர் பதவி ஏற்பு!- இலங்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுப்பு


ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளராக மீண்டும் ஸ்டீவன் டுஜாரிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று தமது பதவியை ஏற்று, ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீன், யுக்ரெயின் விவகாரம் தொடர்பில் வெளியிட்டிருந்த அறிக்கையை வாசித்தார்.
எனினும் அவர் இலங்கை தொடர்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விகளுக்கும் பதில் வழங்கவில்லை என்று இன்னர் சிட்டி பிரஸ் செய்தி ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இன்று இடம்பெற்ற கேள்வி பதில் நிகழ்வின் போது, இன்னர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள், சனல் 4 தொலைக்காட்சி இலங்கை இராணுவம் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய காணொளி குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர்.
இதற்கு அவர் பதில் வழங்கவில்லை.
தொடர்ந்து யுத்துக் குற்றத்துடன் தொடர்புடைய சவேந்திர சில்வாவை ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதுவராக ஏற்றுக் கொண்டுள்ளமை குறித்தும் கேள்வி எழுப்பப்ட்டது.
இதற்கு அவர் பதிலை வழங்க மறுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://news.lankasri.com/show-RUmsyDSULVhry.html

இலங்கை தவிசாளர் பதவி வகிப்பதால் பொதுநலவாய நாடுகளின் பெறுமதிக்கு பாதிப்பு!– கனேடிய பிரதமர்
[ திங்கட்கிழமை, 10 மார்ச் 2014, 11:52.45 PM GMT ]
பொதுநலவாய நாடுகளின் தவிசாளராக உள்ள இலங்கையின் நிலைகண்டு தொடர்ந்தும் கவலை கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்
பொதுநலவாய தினம் நேற்று கொண்டாடப்பட்டமை குறித்து விடுத்துள்ள செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
21 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு தவிசாளர் பதவியை வழங்கியதன் மூலம் பொதுநலவாய நாடுகளின் நம்பகத்தன்மை பெறுமதி இழக்கப்படலாம் என்றும் ஹாப்பர் எச்சரித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் தவிசாளர் பதவியை தற்போது கொண்டுள்ள இலங்கை, பொதுநலவாய அமைப்பின் மதிப்பு காப்பதில் தோல்வி கண்டுள்ளது.
எனவே அந்த நாடு மனித உரிமைகளுக்கு மதிப்பு தரவேண்டும்; என்று தொடர்ந்தும் வலியுறுத்துவதாக ஹாப்பர் கோரியுள்ளார்.
கனடாவை பொறுத்தவரை பொதுநலவாய அமைப்புக்கு அந்த நாடு தொடர்ந்தும் தீவிர உதவியை வழங்கும் என்றும் ஹாப்பர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தமது நாடு பொதுநலவாய நாடுகளின் அபிலாஷைகளுக்கு ஆதரவு வழங்குவதாக கனடாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்திராங்கனி வாகிஸ்வரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுநலவாய ஆரம்ப நாடுகளில் ஒன்று என்ற வகையில் இலங்கை அந்த அமைப்பில் தொடர்ந்தும் உறுதியுடன் செயற்படும் என்றும் வாகிஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.
http://news.lankasri.com/show-RUmsyDSULVhrz.html

Geen opmerkingen:

Een reactie posten