தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 maart 2014

யாழ் ஏழாலை குடும்பஸ்தர் விசாரணைக்கு சென்றவர் வரவில்லை! கடத்தலா??


யாழ்ப்பாணம் வலிகாமத்தின் ஏழாலை பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று (07.03.14) பிற்பகல் ஏழாலை வடக்கில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்ற எண்மர் கொண்ட குழுவினர், தம்மை பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்திக் கொண்டு துண்டுப்பிரசுரம் விநியோகித்தமை தொடர்பில் விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக குறிப்பு ஒன்றினை குடும்பத்தாரிடம் கையளித்து அவரை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் 30 வயதுடைய சுந்தரலிங்கம் அகிலன் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையார் என தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை வடக்கில் மீண்டும் திரை மறைவு செயற்பாடுகளில் சில தரப்புக்கள் முனைப்பு காட்டிவருகின்ற போதும் அவற்றினை இரும்பு கரம் கொண்டு அடக்கி விடுவதில் இலங்கை அரசு மும்முரம் காட்டிவருகின்றது.
அவ்வகையில் மக்களிடையே விழிப்புணர்வினை ஊட்டும் வகையிலான துண்டுபிரசுரங்களை விநியோகித்ததாக கூறி மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். நேற்று முன்தினமிரவு பளைப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ள போதும் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி தகவல்கள் இல்லாதுள்ளது.
வெள்ளை வானில் அவர்கள் பிடித்து செல்லப்பட்டதை பலரும் கண்டுள்ள போதும் அவர்கள் தகவல் வழங்க மறுத்து வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/62190.html

Geen opmerkingen:

Een reactie posten