[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:15.38 AM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியல் உயிர்ப்பிழைப்பை முன்னெடுத்து செல்ல தமிழ்தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டிய கட்டாயத்தையும் ஊவா தேர்தல் எடுத்துரைத்துள்ளது. இது வடக்கு மாகாண மக்களை பின்பற்றி ஊவா மாகாண மக்கள் வழங்கிய தீர்ப்பின் காரணமாகவே ஏற்பட்டது.
வடக்கு மாகாண மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பிரசாரங்களை முறியடித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தினர். எனினும் தொடர்ந்தும் போர் முரசைகொட்டி தென்னிலங்கை மக்களை கவரலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அரசாங்கத்துக்கு ஊவா மாகாண தேர்தல் கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
இது, வடக்கு மாகாண மக்களை பின்பற்றி ஊவா மக்கள் தாமே சிந்தித்து எடுத்த முடிவாகவே எடுத்துக்கொள்ளலாம்
இதன்காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியும் ஆளும் கட்சிக்கும் இடையிலான போட்டி நெக் என்ட் நெக் என்ற அடிப்படையில் அமைந்திருந்தது.
எனினும் அரசாங்க கட்சியினரின் வன்முறைகளுக்கு மத்தியிலேயே அவர்களின் சிறிய வெற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்களை அரசாங்க கட்சியினர் அச்சுறுத்திய போதும் பயப்படாமல் அவர்கள் சென்று தமது விருப்புக்களை எதிர்க்கட்சிகளுக்கு அளித்துள்ளனர்.
இருப்பினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பொறுத்தவரை அந்தக்கட்சி, பாரிய பங்களிப்பை ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
இது காலஞ்சென்ற அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் செயற்பாடுகள் இன்னும் மலையக மக்கள் மத்தியில் இருப்பதே காரணமாகும்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு மாகாணசபை தேர்தலின்போது தோல்வியை சந்தித்தது. கிழக்கு மாகாண சபை தேர்தலின் போது தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிய போதும் அமைச்சர் ஹக்கீம் அதனை நிராகரித்து ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார்.
இந்தநிலையில் ஊவா மாகாணத்தில் தமது தோல்வியை தவிர்த்துக்கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்து போட்டியிட்டது
30 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை இலக்கு வைத்து போட்டி அமைந்த போதும் ஐயாயிரம் வாக்காளர்களே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸூக்கும் வாக்களித்தனர். இது முஸ்லிம் காங்கிரஸூக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
எனவேதான் அது தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து போகும் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அமைத்துள்ள தமிழ்த் தேசிய சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக்கொண்டு அரசியலில் முன்னேற்றம் காண வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்று ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இது தேசிய ரீதியிலும் செயற்படக்கூடிய வாய்ப்பை தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் வழங்கியிருக்கிறது.
எனவே தமிழ்த் தேசிய சபை வடக்கு கிழக்கு மக்களின் குரல்களை ஓங்கி ஒலிக்க செய்யவும் வழியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv4.html
புலம்பெயர் நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்ட திலீபன் மற்றும் கேணல். சங்கரின் நினைவு தினம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:35.25 AM GMT ]
திலீபனின் 27ம் ஆண்டு நினைவு நாளும் கேணல். சங்கர் அவர்களின் 13 ம் ஆண்டு நிகழ்வில் அகவணக்கம் ஈகைச்சுடர் ஏற்றல் மலர்வணக்கம் மற்றும் லெப்.கேணல்
தியாக தீபம் திலீபன், கேணல். சங்கர், பற்றிய கவிதைகள் என்பன இடம்பெற்றது.
தியாக தீபம் திலீபன், கேணல். சங்கர், பற்றிய கவிதைகள் என்பன இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் உணர்வு பூர்வமாக பெருமளவில் மக்கள் நினைவு கூர்ந்துள்ளார்கள்.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை துயரில் ஆழ்த்தினான்.
உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன்
வரலாற்றில் தனி இடம் பெற்று விட்டான்.
வரலாற்றில் தனி இடம் பெற்று விட்டான்.
மீண்டும் புதிய பரிணாமம் படைக்கும் திலீபனின் தியாகம் -பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நிகழ்வு
தியாக தீபம் திலீபன் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவு தினம் கடந்த ஆண்டுகளை விட இவ்வருடம் தாயகத்திலும் , தமிழகத்திலும் , புலத்திலும் புதிய ஒரு பரிணாமம் படைக்கும் வடிவத்தில் எழுச்சி கொண்டுள்ளது .அன்று அவன் வயிற்றில் பற்றிய தீதான் இன்றும் இன்னும் எங்கள் நெஞ்சிலே எரிகின்றது.
அன்று அவன் தாங்கிய விடுதலைத் தாகம்தான்,இன்றும் தணியாத தாகமாய் எம்மிலே தொடர்கின்றது.
தியாக தீபம் திலீபனின் நினைவுச் சின்னங்களை சிங்கள பேரினவாத அரசு தமிழர் தாயகத்தில் அழித்தாலும் தமிழர்கள் மனதிலே ஆழ பதிந்திருக்கும் நினைவுகளை, அழியாச் சுடர்களை என்றும் யாராலும் அழித்திட முடியாது.
அந்தவகையில் பெல்ஜியம் நாட்டில் தியாக தீபம் திலீபனின் நிகழ்வு மிக எழுச்சியாக நடைபெற்றது. இவ் நிகழ்வில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தி தியாக தீபம் திலீபனின் நினைவுகள், எழுச்சிக் கவிதைகள் ஊடாக மீட்கப்பட்டது.
திலீபன் நினைவாக முன்னெடுக்கப்படும் அடையாள உண்ணா நோன்புப் போராட்டம் - ஜேர்மனி
கனடாவில் இடம்பெற்ற திலீபனின் நினைவு தினம்
கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில்நேற்று காலை (செப்டம்பர் 26, 2014) சரியாக 8 மணிக்கு அகவணக்கம், ஈகச்சுடர் ஏற்றல் மற்றும் மலர் வணக்கத்துடன் அடையாள உண்ணா நோன்பு ஆரம்பமாகி நடை பெற்றது. இந்த அடையாள உண்ணா நோன்பிலே பலர் தமது திலீபனின் உண்ணா நோன்பில் தமக்கு ஏற்பட்ட தாயக அனுபவங்களை உரைகளாக வழங்கயிருந்தனர்.
இந்த அடையாள உண்ணா நோன்பு மாலை 6 மணிவரை இடம்பெற்று. அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபனின் வீர வணக்க நிகழ்வு மாலை 6 மணி தொடக்கம் எழுச்சி உரைகள், எழுச்சி நடனங்கள், எழுச்சி கானங்களுடன் நடைபெற்றன
.
திலீபனின் இறுதி வேண்டுகோளான ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்’ என்பதற்கமைய உலக பரப்பெங்கும் மக்கள் எழுசியாக நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிபிடதக்கதாகும்.
.
திலீபனின் இறுதி வேண்டுகோளான ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்’ என்பதற்கமைய உலக பரப்பெங்கும் மக்கள் எழுசியாக நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிபிடதக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv5.html
நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 04:42.27 AM GMT ]
அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி தேர்தல் ஆணையாளரிடம் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தேர்தல் நடத்த விரும்புவதாக அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவித்து 15 நாட்களின் பின்னர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் திகதிகள் குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த வாரம் கொழும்பு கிரஹரி வீதியில் கட்சிக் காரியாலயமொன்றும் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூடி ஜனாதிபதி தேர்தல் தொடர்பான திட்டங்களை வகுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViv6.html
ஜனாதிபதி தேர்தல் காரணமாக முந்தி வரும் வரவு செலவுத் திட்டம்- தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தம்: ஆணையாளருக்கு கூடுதல் அதிகாரம்
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 05:57.24 AM GMT ]
இதனடிப்படையில் வரவுத் செலவு திட்டம் ஒக்டோபர் 20 ஆம் திகதி அல்லது அந்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.
வழமையாக வரவு செலவுத் திட்டம் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படும். எனினும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதால், முன்கூட்டியே வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தை நடத்த குறைந்தது 4 வாரங்களாவது தேவை என்பதால், அதனை ஒக்டோபர் மாதம் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தம்- ஆணையாளருக்கு கூடுதல்
அதிகாரம் தேர்தல்கள் தொடர்பான சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல்களை தேர்தல்கள் செயலகம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பான திருத்தப்பட்ட சட்ட வரைவை விரைவில் தயாரிக்குமாறும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைப் போன்று தேர்தல்கள் ஆணையாளருக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கலந்து கொண்ட சுமந்திரன் மற்றும் ஐ.தே.க. பிரதிநிதி ஆகியோரே இந்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViwz.html
நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் குறித்து டோனி, மஹிந்தவுக்கு பாராட்டு
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 06:04.35 AM GMT ]
நியூயோர்க்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தபோது டோனி அபோட் இந்த கருத்தை வெளியிட்டார்.
7.8 என்ற வீதத்தில் பொருளாதார அபிவிருத்தியை முன்கொண்டு செல்லும் நடவடிக்கையானது இலங்கையை பொறுத்தவரை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என்று அபோட் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் அமர்வுக்கு புறம்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் டோனி அபோட்டும் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடல்களை நடத்தினர்.
இதன்போது மஹிந்த ராஜபக்ச இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து அபோட்டுக்கு விளக்கமளித்தார்
http://www.tamilwin.com/show-RUmsyJRbKViw0.html
Geen opmerkingen:
Een reactie posten