ஜெயலலிதாவின் தீர்ப்பு: விழி பிதுங்கும் ஐடி ஊழியர்கள்...குட்டி சென்னையான பெங்களூர் |
[ சனிக்கிழமை, 27 செப்ரெம்பர் 2014, 05:59.58 AM GMT +05:30 ] |
அதிமுகவினர் குவிவதால் பெங்களூர்-ஒசூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக பரப்பன அக்ஹாரா பகுதியிலுள்ள நீதிமன்றத்துக்கு ஜெயலலிதா வருவார் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவினர் ஒசூர் சாலையின் பல பகுதிகளில் சாலையின் நடுவே பிளக்ஸ் போர்டுகளை வைத்துள்ளனர்.
அதில் ஜெயலலிதா புகைப்படத்திற்கு கீழே அதிமுக நிர்வாகிகள் புகைப்படங்களை பொறித்து, வெற்றி நமதே என்பது போன்ற வார்த்தைகளை இடம் பெறச் செய்துள்ளனர்.
மேலே கன்னடத்திலும், அதற்கு கீழே, தமிழிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அதிமுகவினர் அணி அணியாக திரளுவதால் ஒசூர ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்குதான் இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்த எலக்ட்ரானிக் சிட்டி உள்ளது.
எனவே அங்கு வேலைக்காக செல்லும் ஐடி ஊழியர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துள்ளனர்.
கட்-அவுட், கரைவேட்டி, போன்றவற்றால் பெங்களூர் அதிலும் தெற்கு பெங்களூர் குட்டி சென்னையாக மாறிப்போயுள்ளது.
|
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zaterdag 27 september 2014
ஜெயலலிதா குற்றவாளியே: 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை... நீதிமன்றம் அதிரடி (வீடியோ இணைப்பு)
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten