[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 06:31.44 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தின் அடித்தளம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்தும் இந்தியப் பிரதமர் மோடியின் நிலைப்பாடு தொடர்பிலும் வினவிய போதே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்
இலங்கையில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை சர்வதேச அளவில் கொண்டு சென்றபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலக்கு என்னவென்பது வெளிப்பட்டு விட்டது.
இந்நிலையில் சுய உரிமைகள், தனி அதிகாரங்கள் என்ற பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவது தனி தமிழீழத்தினை உருவாக்குவதற்காகவே கூட்டமைப்பின் இந்த நோக்கம் என்னவென்பதை தெளிவாக புரிந்து கொண்ட இந்தியாவின் புதிய அரசாங்கமும் இவர்களுக்கு துணை போகும் வகையில் செயற்படுவது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது.
இலங்கையின் தேசிய விடயங்களில் குழப்பத்தினை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது நாட்டிற்குள் பிரிவினையினை ஏற்படுத்தும் வகையிலோ இந்தியா செயற்பட முயற்சிக்குமாயின் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம்.
இந்தியாவுடன் அரசாங்கம் நல்ல உறவு முறையினை பேணுகின்றது. இந்தியா இலங்கை அரசுடன் உண்மையாக செயற்படுகின்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது. எனவே, இதனை தொடர்ச்சியாக நல்ல முறையில் கொள்வோம்.
மேலும், இந்தியாவின் முன்னைய அரசாங்கத்தின் உதவியுடனேயே இலங்கையில் பிரபாகரனினால் பயங்கரவாத அமைப்பொன்று ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு துணைபோகும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டது
தற்போது புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டாலும் கூட்டமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் செயற்பட்டுக் கொண்டே உள்ளது.
எனவே, தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயமும் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு அடித்தளமிடும் நோக்கிலேயே.
எனவே, பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkpy.html
“சஹன அருண” திட்டத்தில் தமிழ் புறக்கணிப்பு (செய்தித் துளிகள்)
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 06:48.52 AM GMT ]
இந்த அரச நிகழ்வுகளில் அரச நிருவாக மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக திவிநெகும பயனாளிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
“சஹன அருண” (நிவாரண உதயம்) எனும் திட்டத்தினை விளக்கி நாடெங்கிலுமுள்ள பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கையேடு தனிச் சிங்கள மொழியிலேயே அச்சிடப்பட்டுள்ளதாக பயனாளிகள் கவலை வெளியிட்டனர்.
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மொழி மூலம் கடமையாற்றும் சகல பிரதேச செயலகங்கள் மூலமாகவும் தமிழ் மொழி பேசும் திவிநெகும பயனாளிகளுக்கும் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தனிச் சிங்களத்தில் அமைந்த கையேடுகளே விநியோகிக்கப்பட்டன.
“அவசரமாக இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படுவதால் தமிழ் மொழி மூலம் இந்தத் துண்டுப் பிரசுரத்தை வெளியிட கால அவகாசம் இருந்திருக்கவில்லை” என்று ஏறாவூரில் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் கலந்து கொண்ட வைபவத்தில் பேசும்போது, வாழ்வின் எழுச்சித் திட்ட மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஏ.எம். அலி அக்பர் குறிப்பிட்டார்.
இலங்கைக் கடற்படையினரால் 9 இந்திய மீனவர்கள் கைது
ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஒன்பது இந்திய மீனவர்களை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மீனவர் சோதனை காரியாலயத்தின் உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேசமூர்த்தி இதனை உறுதி செய்துள்ளார்.
தென் இந்தியாவிலிருந்து வந்து இரண்டு ட்ரோலர் படகுகளின் மூலம் குறித்த மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனவர்களுடன் படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மலையகத்தில் பாம்புகளின் தொல்லை அதிகரிப்பு
மலையகப் பகுதிகளில் அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் தொழில் புரிவதில் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த காலங்களில் பல தோட்டங்களில் தொழிலாளர்கள் தொழில் செய்துக் கொண்டிருக்கும் போது, குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிலர் உயிரிழந்ததோடு, பலர் கடும் உபாதைக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் சிறுத்தைப் புலி தாக்குதலுக்கும் பலர் உள்ளாகியுள்ளமை யாவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல், அக்கரப்பத்தனை பகுதி தோட்டங்களிலுள்ள தேயிலை மலைகளில் அண்மைக்காலமாக விஷப் பாம்புகளை காணக்கூடியதாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பதாக ஆக்ரோவா தோட்டத்தில் ஒருவர் விறகு சேகரிக்க சென்ற பொழுது விரியன் பாம்பு தீண்டியதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
அத்தோடு லபுக்கலை தோட்டத்திலும் தொழில் செய்துகொண்டிருந்த ஒருவர் பாம்பு தீண்டி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் மலையகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.
கடந்த திங்கட்கிழமை அக்கரப்பத்தனை ஆக்ரோவா தோட்டத்தில் டயகம செல்லும் பிரதான பாதைக்கு அருகாமையில் விரியன் பாம்பொன்று இருந்ததை மக்கள் கண்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக தோட்ட மக்கள்,
இத்தோட்டத்தில் வித்தியாசமான விஷப் பாம்புகளை அடிக்கடி காணக்கூடியதாகவுள்ளதாகவும், இதனால் பெரும் அச்சத்துடனேயே தொழில் செய்ய வேண்டிய நிலையுள்ளதாகவும் கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkpz.html
ஈழத் தமிழர்களின் பிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல: பழ. நெடுமாறன்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 07:14.15 AM GMT ]
தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக பாஜக தலைவர்கள் இரட்டை வேடம் போடுகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற அறக்கட்டளை நிர்வாகக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், முற்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை நவம்பரில் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது” என்றார்.
“அண்மையில் இந்தியா வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒருங்கிணைந்த இலங்கைக்குள்தான் தீர்வு கேட்கிறோம் என்கிறார். ஆனால், நீங்களோ தனி ஈழம் தான் தீர்வு என்கிறீர்களே” என்று கேட்டபோது,
ஈழத் தமிழர் பிரச்சினையைப் பொறுத்தவரை ஈழத் தமிழர், புலம்பெயர்ந்த தமிழர் ஆகியோரிடம் பொது வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல. அவர்களிடையே வேறுபட்ட கருத்துகள் உள்ளன.
வடக்கு மாகாணத்துக்கு தேர்தல் நடந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும் இதுவரை எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை என்று அவர்கள் தான் சொல்கின்றனர்.
இப் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவின் நிலைப்பாடே இரட்டை வேடமாக உள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும் என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkp1.html
Geen opmerkingen:
Een reactie posten