தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 september 2014

சுப்பிரமணிய சுவாமி படத்திற்கு செருப்படி!

முதல்வர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கிற்கு காரணமா சுப்பிரமணிய சுவாமியை அதிமுக கட்சியினர் செருப்பால் அடித்துள்ளனர்.
கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையில் முதலமைச்சர் பதவியில் இருந்த ஜெயலலிதா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி, 1996ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
சென்னையில் விரக்தி மனநிலையில் காணப்படும் அதிமுகவினர் சுப்ரமணிசுவாமியின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். சுப்ரமணியசுவாமிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள் பல்வேறு முழக்கங்களையும் எழுப்பியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten