தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 26 september 2014

காணாமல் போனவர்களின் விசாரணை நாளை கிளிநொச்சியில் ஆரம்பம்

பாதுகாப்புக்காக அதிக நிதியொதுக்கீடு செய்யும் இலங்கை அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 03:58.39 PM GMT ]
இலங்கையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்காக அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூல உரையின் போது இந்த விடயம் வெளியிடப்பட்டது.
இதன்படி 2015ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவீனங்களுக்காக 28502 கோடி ரூபாய்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும் கல்விக்காக 4760 கோடி ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின்படி செலவீனங்களை ஈடுசெய்வதற்காக 181 ஆயிரத்து 200 கோடி ரூபாய்கள் கடன்களாக பெறப்படவுள்ளன.
இந்தநிலையில் 2015ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 1812 கோடி ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பிரதமர் டி.எம்.ஜயரத்னவினால் இன்று இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViuy.html
ஐ.தே.க.வின் துணை தேசிய அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 04:06.31 PM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தேசிய அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்படவுள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலையில் ஹரின் பெர்னாண்டோ கட்சியின் தேசிய மட்ட செல்வாக்கைக் கொண்டுள்ளார். மேலும் பதுளையில் அவர் பெற்ற வரலாற்று வெற்றி இலங்கை எங்கும் ஐ.தே.க.வுக்கு புது ரத்தம் பாய்ச்சியுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் தேர்தல்களில் நாடுதழுவிய ரீதியில் ஹரின் பெர்னாண்டோவின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அவர் துணை தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக உள்ள தயா கமகே கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். மேலும் தற்போதைய நிலையில் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளை இவரே பொறுப்பேற்றுள்ளார்.
கட்சியின் துணை தேசிய அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ள ஹரின் பெர்னாண்டோ விரைவில் ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViuz.html
காணாமல் போனவர்களின் விசாரணை நாளை கிளிநொச்சியில் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 04:24.56 PM GMT ]
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நாளை கிளிநொச்சியில் தனது விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின்போது காணாமல் போனோரைக் கண்டறியும் பொருட்டு ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை என்று நாட்டின் பல பகுதிகளில் இந்த ஆணைக்குழு தனது விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
எனினும் வவுனியா மாவட்டத்தில் மட்டும் இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் நாளை தொடக்கம் 30ம் திகதி இந்த ஆணைக்குழுவினர் தங்களது விசாரணைகளை கிளிநொச்சி மற்றும் பூநகரியில் மேற்கொள்ளவுள்ளனர்.
27, 28ம் திகதிகளில் கிளிநொச்சியிலும், 29,30 திகதிகளில் பூநகரியிலும் ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெறும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKViu0.html

Geen opmerkingen:

Een reactie posten