[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 02:22.16 PM GMT ]
ஒரு அறை கொண்ட சிறிய வீடொன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபா மின்கட்டணம் விதிக்கப்பட்ட ஆச்சரியம் காலியில் நடந்துள்ளது.
காலி, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மின் தொடர்பு வழங்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை மாதம் தோறும் 500 ரூபா மட்டுமே மின் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் 842 ரூபாவுக்கான மின் கட்டணப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகையாக ஒன்றரை லட்சம் ரூபா பாக்கி இருப்பதாகவும் மின் கட்டணப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைக் கண்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியில் மார்பு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே இச்சம்பவம் மின்சார சபையின் தவறு என்று ஏற்றுக் கொண்டுள்ள பிரதேச மின் அதிகாரி, தவறைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit4.html
ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக மக்கள் நீதிமன்றம்! ஐ.தே.க. புது உத்தி
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 03:04.57 PM GMT ]
இந்த நீதிமன்றத்தின் ஊடாக ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதில் உள்ள தார்மீக அடிப்படையிலான தவறுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் பரந்தளவிலான பிரச்சாரங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் ஐ.தே.க.வின் முக்கியஸ்தர் ஷிரால் லக்திலக்க, கொழும்பில் கலந்துரையாடல்களையும் நடைபயணங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதன் அவசியம் குறித்தும் மக்கள் நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சாரங்களை முன்னெடுக்க ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit5.html
சர்வதேச அணுசக்தி அதிகார சபைத் தலைவராக இலங்கையர் தெரிவு
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 03:14.54 PM GMT ]
சர்வதேச நாடுகளின் அணு ஆயுத உற்பத்திகளை கண்காணித்தல், அணுப் பரம்பல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அணுகுண்டு சோதனைகளை தடுத்தல் என்பன இந்த அதிகார சபையின் பொறுப்புகளாகும்.
உலகின் 162 நாடுகள் இந்த அதிகார சபையின் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன.
இந்நிலையில் இந்த அதிகார சபையின் புதிய தலைவராக வியன்னாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி அப்துல் அஸீஸ் தெரிவாகியுள்ளார்.
இதன் மூலம் ஐ.நா.வின் கீழுள்ள சர்வதேச அமைப்பொன்றின் தலைவராக தெரிவாகிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit6.html
உடைந்து சிதறுகிறது கட்சி! தனிமைப்படுத்தப்படும் சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 03:29.01 PM GMT ]
தற்போதுள்ள நிலையில் கட்சியின் பிரபல்யமிக்க தலைவர்களான டிரான் அலஸ், சுசில் கிந்தெல்பிட்டிய போன்றோர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
மேல்மாகாண சபை உள்ளிட்ட மாகாண சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள இன்னும் சில முக்கியஸ்தர்கள் ஜே.வி.பி.யுடன் இணைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே சரத் பொன்சேகாவை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள அரசாங்கம், அக்கட்சியிலிருந்து சிலரை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றது.
மேலும் ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது மிகவும் குறைவான வாக்குகளைப் பெற்றதன் காரணமாக கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கும் பாரியளவில் சரிந்துள்ளது.
இதன் காரணமாக சரத் பொன்சேகாவின் கட்சி மிக விரைவில் பல கூறுகளாக உடைந்து சிதறும் அபாயம் காரணமாக அரசியலில் பொன்சேகா தனிமைப்படுத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.
இதற்கிடையே ஊவா தேர்தலில் பின்னடைவு, சரத் பொன்சேகாவின் இரண்டாம் மகள் ஆபிரிக்கர் ஒருவரை திருமணம் செய்துள்ள சம்பவங்கள் போன்றவற்றின் காரணமாக அவரும் மனதளவில் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit7.html
இலங்கை யுவதி மீது டுபாயில் கூட்டு பாலியல் வன்முறை
[ வெள்ளிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2014, 01:37.57 PM GMT ]
குறித்த யுவதி இலங்கையின் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் அந்த ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்த விடயம் குறித்து வழமை போன்று அரசாங்கம் அலட்சியமாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குறித்த யுவதி சுற்றுலா வீசாவில் டுபாய் சென்றிருப்பதால் இது குறித்து தலையிட முடியாது என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் கைவிரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVit3.html
Geen opmerkingen:
Een reactie posten