[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 09:21.37 AM GMT ]
நேற்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்ட இத்தொழிற்சாலையின் முதற்கட்ட உற்பத்தியாக படையினருக்குத் இரும்புக் கட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இராணுவத்தின் யுத்த தளபாடங்கள் பிரிவின் உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக ஹொரன யுத்த தளபாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இரும்பு மற்றும் உலோகத்திலான கட்டில், வாகனங்களின் கூரைகள், சீருடை தைக்கும் இயந்திரம், கட்டில், அச்சு இயந்திரங்கள் என்பவற்றை தயாரிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்பட்டது.
இத்தொழிற்சாலையின் பொறுப்பாளர் கேர்னல் எச்.எல் குருகேவின் கீழ் 75 பேர் இயங்கவுள்ள இத்தொழிற்சாலையில் முதற்கட்டமாக ஒரு நாளைக்கு 50 இரும்புக் கட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkp4.html
யாழ்.வரணியில் ஒருவரைக் காணவில்லை- கொழும்பு செல்லவிருந்த பஸ் மீது யாழில் கல் வீச்சு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 09:29.16 AM GMT ]
கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, பளையிலுள்ள இரும்பு ஒட்டும் வர்த்தக நிலையமொன்றுக்கு வர்ணப்பூச்சு வேலைக்காகச் சென்ற அவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு செல்லவிருந்த பஸ் மீது யாழில் கல் வீச்சு
யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் ஒன்றின் மீது பண்ணைப் பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை இரவு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெற்ற பஸ் வண்டியொன்று கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ள முயன்ற போதே இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெறாத பஸ் உரிமையாளர்கள் மூவரே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் இம்மூவருக்கு வலை வீசப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களைச் சேவையில் ஈடுபட அனுமதிக்கவில்லையென்ற கோபத்திலேயே அவர்கள் இந்த கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ் - கொழும்பு வழித்தடங்கல் பஸ் சேவையில், வழித்தடங்கல் அனுமதியில்லாதவர்கள் சேவையில் ஈடுபடமுடியாது என யாழ்ப்பாணப் பொலிஸார் திங்கட்கிழமை பகல் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை தனியார் பஸ் ஒன்றின் மீது இடம்பெற்ற கல்வீச்சில் பெண் ஒருவர் காயம் அடைந்தார். அத்துடன் பஸ் வண்டியின் கண்ணாடிகளும் உடைந்துள்ளதகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkp5.html
ஹரீனுடன் சந்தித்தது பற்றி நாமல் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 09:52.00 AM GMT ]
இந்த சந்திப்பு திட்டமிட்டு நடந்ததல்ல என ஹரீன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,
ஹரீன் பெர்னாண்டோவை சந்தித்ததில் எவ்வித தவறும் கிடையாது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு என் தந்தையோடு அமர்ந்து தேநீர் குடிக்க முடியுமென்றால், ஹரீனுக்கு மட்டும் ஏன் முடியாது? ஹரீன் அண்ணா என்னோடு உட்கார்ந்தால் மட்டும் எல்லோரும் சேறு பூசுகிறார்கள் என்று நாமல் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkp6.html
மலேசியாவில் இலங்கையரை வெளியேறுமாறு உத்தரவு
[ செவ்வாய்க்கிழமை, 02 செப்ரெம்பர் 2014, 10:21.17 AM GMT ]
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இவர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி வரைக்குமே மலேசிய அரசு, காலக்கெடு விதித்திருக்கிறது.
அதன்பிறகு இவர்கள் வெளியேறாவிடின் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTWKUkp7.html
Geen opmerkingen:
Een reactie posten