தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 augustus 2013

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தனியார் மினிபஸ் சேவையை கீரிமலை வரை நீடிக்குமாறு மக்கள் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 04:37.27 PM GMT ]
காங்கேசன்துறை வீதி வழியாக மாவிட்டபுரம் வரை நடைபெறும் தனியார் மினிபஸ் சேவையை, கீரிமலை வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவிட்டபுரம், கீரிமலை பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
அண்மைக்காலமாக குறிப்பிட்ட பகுதியில் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
எனினும், பாதையில் போக்குவரத்து வசதிகள் இன்மையால் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றே தமது பல்வேறு தேவைகளுக்கும் செல்ல வேண்டியவர்களாக உள்ளார்கள்.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை, பிரதேச செயலகம், கமத்தொழில் தினைக்களம், வங்கிகள் என பல தேவைகளை பூர்த்தி செய்வதில், போக்குவரத்து வசதியின்மையயால் மக்கள் பெரும் அசெளகரியங்களை அடைந்து வருகின்றர்.
இந்நிலையில் மினி பஸ் சேவையை நீடிக்க வேண்டும் என கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 09:51.09 AM GMT ]
பிரித்தானிய குடிவரவு துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்போரை தேடி கைது செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
லண்டனின் வோல்ஹம்ஸ்டேவ், கென்சல் கிறீன், ஸ்டப்பேர்ட் மற்றும் கிரிக்கெல்வூட் பிரதேசங்களில் கடந்த மூன்று தினங்களாக அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தேடுதலின் போது, தர்ஹம், மென்செஸ்டர் உட்பட நாடு முழுவதும் 90 சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை எச்சரித்து வெளியிடப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை அடுத்தே அதிகாரிகள் இந்த தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த தேடுதல்களை அடிப்படை சுதந்திரத்தை மீறும் வன்முறை செயல்கள் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பெர்ரி காடினர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உள்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் குடிவரவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனைகளின் போது, சட்டவிரோதமாக தங்கியிருந்த  ஐந்து இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரித்தானிய தூதரகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten