[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 03:31.19 PM GMT ]
மட்டக்களப்பு தேத்தாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா பாடசாலைத் தலைவர் த.விமலாந்தராஜா தலைமையில் நடைபெற்றபோது இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலய முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.புவனசுந்தரம், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.அ.சீவரெத்தினம், பிரதேச பாடசாலை அதிபர்கள், தேத்தாத்தீவு ஆலயங்களின் மதகுருமார்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இங்கு மேலும் தெரிவிக்கையில்!
முன்பெல்லாம் இவ்வாறான பாலர் பாடசாலைகளை அரச சார்பற்ற நிறுவனங்கள் பொறுப்பேற்று ஆசிரியர்களுக்கு ஊதியம் முதல் அனைத்து வழிகளிலும் உதவிகள் செய்து வந்தன. ஆனால் தற்போது அந்நிறுவனங்கள் சென்றதன் பின்னர் பாலர் பாடசாலைகள் பல கவனிப்பார் அற்று இருக்கின்றன. இவைகளை அரசாங்கம் பொறுப்பேற்று முன்கொண்டு நடத்த வேண்டும்.
சென்ற கிழக்கு மாகாண சபை இவ்வாறான பாலர் பாடசாலைகளுக்கான ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தது. ஆனால் அதனை மேற்கொள்ளவில்லை. தற்போது இருக்கும் மாகாண சபையாவது இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
அது மட்டுமல்லாது இது தொடர்பாக அரசுக்கு நாம் பலமுறை அறிவுறுத்தல் கொடுத்திருக்கின்றோம். வெளிநாடுகளை எடுத்து நோக்கினால் அங்கெல்லாம் முன்பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு என நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அவர்களுக்கு தெரியும். மனிதனின் ஆரம்பம் இவ்வாறான முன்பள்ளிகள் மூலம் தான் சீர்படுத்தப்படுகின்றது.
ஆனால் இங்கு அவ்வாறான நிலை இல்லை. இதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம் அத்துடன் இங்கு குறிப்பிட்டதன் படி இப்பாலர் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைப்பதற்குரிய செயற்பாடுகளையும் நான் மேற்கொள்வேன். இதற்காக எனது பன்முக நிதியில் ஒதுக்கீடு செய்வேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு இறுமாப்புடன் நடந்து கொள்கிறது!- கருணாநிதி குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2013, 03:29.28 PM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தச் சொல்லி மத்திய அரசு வற்புறுத்தியும் இலங்கை அரசு மதிப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க மறுக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ச, நினைத்ததை எல்லாம் செய்யும் மனப்பான்மையுடன் செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten