[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 09:35.01 AM GMT ]
தமிழ் அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கிணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் 18.08.2013 அன்று அப்படம் திரைப்படப்பட்டது.இப் படத்தை பார்த்த தமிழ் அமைப்புக்கள் சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது. என கருத்து வெளியிட்டு உள்ளனர்.
இதேவேளையில் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் சினி வேல்ட் திரையரங்கில் எதிர்வரும் 23.08.2013 அன்று திரையிட திட்டமிட்டுள்ளார்கள். அதனால் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் ஒன்று பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழீழ லட்சியத்தில் தொடர்ந்து பயணிக்கவும் மாவீரர்களின் கனவை நனவாக்கவும் அணைத்து பிரித்தானியா வாழ் தமிழ் மக்களையும் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 22ம் திகதி மாலை 2 மணி தொடக்கம் 6 மணிவரை நடைபெறவுள்ள இம்முற்றுகைப் போராட்டம் CINEWORLD HEAD OFFICE | POWER ROAD STUDIOS POWER ROAD | CHISWICK | LONDON | W4 5PY | இடம்பெறும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
புல்மோட்டையில் கடற்படையினரால் தொடர்ச்சியாக அபகரிக்கப்படும் நிலங்கள்: குழப்பத்தில் மக்கள்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 10:23.59 AM GMT ]
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தோட்டப்பயிர் செய்து செங்கற்சூலை உற்பத்தி செய்து வீடுகள் கிணறுகள் அமக்கப்பட்டு மக்கள் தமது ஜீவனோபாயத்தை நடத்தி வந்தவேளை அப்பகுதி உட்பட அண்டிய பிரதேசங்களாக சுமார் 22A 2R 29.3 பேர்ச் PLC/EP/Sur/01/16 இலக்க வரைபட மூலம் ஏக்கர் மட்டுமே கடற்படையினருக்காக பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டது.
ஆனால் கிட்டத்தட்ட 80 க்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் அதனோடு சேர்த்து அடைக்கப்பட்ட அதேவேளை, கடற்படை முகாமுக்கு முன்னால் தோட்டப்பயிர் செய்து கற்களால் கட்டபப்பட்ட கிணறுகள் வீடுகள் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக வசித்து குடும்பங்கள் பலாத்காரமாக கடற்படையினரால் வெளியேற்றப்பட்டு, இன்று அவ்விடத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டு அதை சுற்றி கட்டிட வேலைகள் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட காணிகளை தவிர இன்று நில அளவை குறித்து அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சத்திலுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினரால் பொதுமக்களுக்குச் சொந்தமான ஒப்பமுள்ள காணிகள் பொன்மலைக்குடா பகுதியில் பலவந்தமாக பிடிக்கப்பட்ட நிலையில் சிறிய கடற்படை முகாம் அமையபெற்றுள்ளது.
அரிசிமலையை அண்டிய பகுதியில் சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிறுவனமொன்றினால் கட்டிக்கொடுக்கப்பட்ட நான்கு வீடுகளிலுள்ளவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முற்கம்பிகள் போட்டு தடுக்கப்பட்டு, இன்னும் மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டும் விடுவிக்கப்படாமை குறித்தும் இப்பிரதேச மக்களின் தொடரான குழப்ப நிலையிலுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை 14ம் கட்டை பகுதியில் நாக விகாரைக்காக சுமார் 500 ஏக்கர் அளவை மேற்காள்ள வந்தவேளை பொதுமக்கள் வீதிக்கு இறங்கியநிலையில் அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சரினாலும் அரசாங்க அதிபராலும் நில அளவையை தற்காலிகமாக நிறுத்தும்படி அனுப்பப்பட்ட கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
Geen opmerkingen:
Een reactie posten