தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

முடிவில்லாமல் தொடரும் துயரம்: 10 ஈழத் தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம்

காதல் தோல்வி: விமானப் படை கோப்ரல் மரணம்- தூக்கில் தொங்கிய இளம் ஜோடி
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 10:48.55 AM GMT ]
திருகோணமலை மாபில் பீச் விடுமுறை விடுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்து, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விமானப்படை கோப்ரல் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று முற்பகல் உயிரிழந்ததாக விமானப்படையின் பேச்சாளர் குறுப் கப்டன் ஹென்ட் விஜேசூரிய தெரிவித்தார்.
உயிரிழந்த கோப்ரல் 30 வயதான மதுர குமார பிரியதர்ஷன எனவும் அவர் காலி -கராந்தெனிய பிரசேத்தை சேர்ந்தவர் என்றும் அவர் கூறினார்.
விமானப்படை கோப்ரல், மாபில் பீச் விடுதியில் பணியாற்றிய விமானப்படையை சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்துள்ளார்.
அந்த பெண் மற்றுமொரு கடற்படை அதிகாரியுடன் காதல் தொடர்புகளை கொண்டிருந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து அண்மையில் அந்த விடுதிக்கு சென்ற கோப்ரல் அந்த பெண் மற்றும் விமானப்படை வீரரை சுட்டுக்கொன்று விட்டு தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
காதல் தோல்வியால் இளம் ஜோடி தற்கொலை
ருவான்வெல்ல மொரதொட்ட பிரதேசத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு இளம் வயது ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
14 யுவதியும் 16 வயதான இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
16 வயதான இளைஞனின் சடலம் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. இளம் பெண்ணின் சடலம் மரத்துக்கு அருகில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் தோல்வி காரணமாக இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளமை முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
முடிவில்லாமல் தொடரும் துயரம்: 10 ஈழத் தமிழர்கள் சாகும்வரை பட்டினிப் போராட்டம்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 11:24.51 AM GMT ]
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றுமாறு கோரி ஈழத்தமிழ் அகதிகள் 10 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்படுள்ளனர். இதில் பலர் மீது வழக்குகள் கூட இல்லை. இருந்தும் இங்குள்ள தமிழர்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றாமல் வெளிநாட்டு வாழ் அகதிகள் சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் 5 நபர்களை விடுதலை செய்யவதாகக் கூறி, மேலும் 10 நபர்களை இங்கு கொண்டு சிறை வைக்கிறது கியூ பிரிவு காவல்துறை. இதனால் இங்கு இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.
தற்போது உள்ள 52 அகதிகளில் பலர் ஏற்கனவே பல முறை உண்ணா நிலை போராட்டம் செய்துள்ளனர். சிலருக்கு விடுதலை உத்தரவும் வந்துள்ளது. இருந்தும் காவல்துறை இவர்களை விடுவிக்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இம்முறை முகாம்வாசிகள் முடிவாக ஒரு சாகும் வரை பட்டினிப் போராட்டம் செய்வதாக அறிவித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர். தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றும் படி கோரிக்கை வைத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முகம்வாசிகளின் பெயர்கள் வருமாறு,
காந்தி மோகன், காண்டீபன், பரமேஸ்வரன், ஜான்சன், சுமன், ரமேஷ், சசிதரன், ஈஸ்வரன், பாலகுமார், காளிதாஸ் ஆகியோர்கள் இன்று காலை முதல் போராட்டத்தை தொடங்கினர். நாளை முதல் மேலும் பலரும் இப்போராட்டத்தில் இணையவுள்ளதாக தெரிவித்தனர்.
முகாம்களில் வாழும் ஈழத் தமிழர்களின் துயரம் முடிவில்லாமல் தொடர் கதையாக இருக்கிறது. எத்தனையோ மனித உரிமை ஆர்வலர்கள், கட்சிகள், அமைப்புகள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும், அரசு மட்டும் இவர்களின் துன்பத்தை கண்டும் காணாது போல் உள்ளது. இந்த முறையேனும் அரசு இவர்களின் குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten