தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் ஆகஸ்ட் 7 வரை மறியல்

புதிய இராணுவத் தளபதி இன்று கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்பு!
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 02:52.42 PM GMT ]
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவ தளபதிக்கான கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
இராணுவத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற அணிவகுப்பு அணிவகுப்பை மரியதையை அடுத்து, ஜெனரல் ஜகத் ஜயசூரிய இராணுவத் தளபதிக்கான கடமைகளை ஒப்படைத்தார்.
அத்துடன்,  இதன்போது இராணுவ தளபதியின் உத்தியோகபூர்வமான வாளையும் புதிய இராணுவத் தளபதியிடம் ஜெகத் ஜெயசூரிய கையளித்தார்.

கைது செய்யப்பட்ட 34 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் ஆகஸ்ட் 7 வரை மறியல்
[ புதன்கிழமை, 31 யூலை 2013, 03:45.53 PM GMT ]
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை விளக்கமறியலில்  வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வருகிறார்கள்.
இன்று நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று தகவல் வெளியானது.
இதனால் மீனவர் கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து கடலுக்கு சென்றவர்கள் குறித்த விபரங்களை அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 34 பேர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு ஆகஸ்ட் 7 வரை காவல் நீடித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Geen opmerkingen:

Een reactie posten