தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

இலங்கை கடற்படையினர் கைது செய்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!- இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது - வாகரையில் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவர் கைது

மீள் திருத்தம் செய்யப்பட்ட க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகிறது
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 11:58.36 AM GMT ]
மீள் திருத்தம் செய்யப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் பரீட்சைத் திணைக்களத்தால் இன்று வெளியிடப்படவுள்ளது.
இன்று மாலை மீளாய்வு செய்யப்பட்ட முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
80000 பரீட்சாத்திகள் மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
பரீட்சாத்திகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk  என்ற இணையதள முகவரியில் பார்வையிடலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர் கைது செய்த இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!- இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா கைப்பற்றப்பட்டது - வாகரையில் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவர் கைது
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 01:09.09 PM GMT ]
இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை நேந்று முன்தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுசேரியின் காரைக்கால் ஆகிய பகுதிகளை சேர்ந்த 34 மீனவர்களும், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி சென்று மீன்பிடித்த குற்றச்சாட்டில், தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வலை மற்றும் படகுகளை சேதப்படுத்துவதாகவும் சில நேரங்களில் கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதாகவும் இந்திய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர மேலும் 74 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன் அவர்களை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைமுகத்தில் தங்க வைத்துள்ளனர்.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சா தூத்துக்குடியில் கைப்பற்றபட்டது
இலங்கைக்கு கடத்திச் செல்லும் நோக்கில், தூத்துக்குடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப் பொருளை தமிழக கியூ பிரிவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
தமிழகத்தின் இராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு போதைபொருள் கடத்தல் மற்றும் அனுமதியின்றி செல்பவர்களையும் இந்திய சுங்க துறை அதிகாரிகளும், கியூ பிரிவு பொலிஸாரும் தீவிரமாக கண்காணித்து தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் திட்டமிட்டு இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் சுங்க அத்தியட்சகர்கள் அஜித்குமார், வெங்கடேஷ், புகழேந்தி மற்றும் சுங்கதுறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று தேடுதல் நடத்தினர்.
இந்த தேடுதலின் போது, தூத்துக்குடி கம்பிபாடு என்ற இடத்தில் முட்புதர் அருகில மறைத்து வைத்திருந்த பொதியொன்றை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தவர்கள், அதிகாரிகளை கண்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
கஞ்சாவை கைப்பற்றிய பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகரையில் கசிப்பு உற்பத்தியாளர் ஒருவர் கைது
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தே நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கதிரவெளியிலுள்ள சோதையன் கல் காட்டுப் பகுதியில் வாகரை பதில் பொலிஸ் பரிசோதகர் ரீ.ஜெயசீலன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொன்ட திடீர் சுற்றி வளைப்பின் போது ஒருவர் கைது செய்யப்படதுடன் ஏனையோர் காட்டுக்குள் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.
இதன்போது கசிப்பு உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கசிப்பு மதுசாரம் 15 ஆயிரம் மில்லி லீற்றர் மற்றும் மதுசாரத் திரவம் (கோடா) 45 ஆயிரம் மில்லி லீற்றர் போன்றவையும் கைப்பற்றப்பட்டதாக பதில் பொலிஸ் பரிசோதகர் ரீ.ஜெயசீலன் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தேக நபர் இன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்றில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்தங்கிய மேற்படி பிரதேசத்தில் கசிப்பு பாவனையினால் குடும்ப பிரச்சினைகள் மற்றும் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten