தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

ஜனாதிபதி மஹிந்தவுக்கு உரிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும்!- இரா. சம்பந்தன்

வடமாகாண சபைத் தேர்தல்! யாழில் போட்டியிட 11 அரசியல் கட்சிகள், 9 சுயேட்சைக் குழுக்கள் தகுதி: மூவரது வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 11:40.05 AM GMT ]
வடமாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்திலிருந்து 11 அரசியல் கட்சிகளும் 9 சுயேட்சைக் குழுக்களும் தகுதி பெற்றுள்ளதாக யாழ்.தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளனார்.
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைபெறும் நிலையிலேயே இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக 13 அரசியல் கட்சிகளும் 10 சுயேட்சைக் குழுக்களும் தேர்தல் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்திருந்தன.
இவற்றில் இரண்டு சிங்கள இனவாத அரசியல் கட்சிகளது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதோடு ஒரு சுயேட்சைக் குழுவினதும் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்தவுக்கு உரிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும்!- இரா. சம்பந்தன்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 06:18.36 AM GMT ]
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உரிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் காட்டமாகத் தெரிவித்தார்.
காணி, பொலிஸ் அதிகாரங்களை என்னிடமிருந்து எவரும் எடுத்துவிட முடியாது. அதை விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசமைப்பில் இந்த அதிகாரங்கள் குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று, பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் நிர்வாகிகளை நேற்று முன்தினம் அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்திய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துத் தொடர்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஜனாதிபதி, தான் நினைக்கும் நேரங்களில் ஒவ்வொன்றைச் சொல்லி வருகின்றார். அவரின் ஒவ்வொரு வேறுபட்ட கருத்துகளுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் முக்கியமான விடயங்கள். இவை குறித்து தற்போது ஜனாதிபதி, தெரிவிக்கும் கருத்துக்களைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உரிய நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிலடி கொடுக்கும். அதுவரை பொறுத்திருங்கள் என்று சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten