தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

தான் ஏன் போட்டியிடவில்லை: டக்ளஸ் விளக்கம் !

அதிகமாக வாக்குகளைப் பெற்றாலும் முதலமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது – மகிந்த
31 July, 2013 by admin
நடைபெறவுள்ள வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவியை வழங்குவது தேர்தலின் பின்னரே என மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதற்கு அதிகபட்சமாக குறித்த மாவட்டத்தில் அதிகமான விருப்பு வாக்குகள் பெற்றிருக்க வேண்டும் என்பதுடன் அவர் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும் அவரது சுய நிலைமையை பரிசீலனை செய்தே முதலமைச்சர் பதவி வழங்கப்படுமென மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று (30) ஊடகங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர அரசாங்கத்துடன் இணைந்ததை அடுத்து வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் யார் என ஊடகங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு வரவிருக்கின்றனரா என கேள்வி எழுப்பியதற்கு, ஜனாதிபதி புன்சிரிப்புடன் அவ்வாறு உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் எடுப்பதற்கான கதவை தற்போது தற்காலிகமாக மூடிவைத்துள்ளதாக கூறினார்.

எனினும் பிரதேசவாரியாக அரசுடன் இணையும் பிரதிநிதிகளுக்கு வருவதற்கான கதவு திறந்தே இருக்கிறது என மஹிந்த ராஜபக்ஷ இதன்போது மேலும் கூறினார்.
தான் ஏன் போட்டியிடவில்லை: டக்ளஸ் விளக்கம் !
01 August, 2013 by admin
'மகிந்தர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 'வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கிக்கொண்டது ஏன் ?' என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தீர்மானித்துக்கொள்வோம்' என்று அவர் தெரிவித்தார். இந்த தேர்தலை வெற்றிகரமாக முடிக்க .... என்று இவர் சொன்னால் ..... இவர் என்ன தேர்தல் திணைக்களத்திலா வேலைசெய்கிறார் ? இலங்கை இராணுவத்தை வடக்கில் நிலை நிறுத்தி மகிந்தர் இத்தேர்தலை நடத்தி முடிப்பார். இதில் டக்ளஸ் என்ன உதவிசெய்யப்போகிறார் ?

Geen opmerkingen:

Een reactie posten