தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சர்வதேச பிடியாணை

விஷ விதைத் தூள் கலந்த தண்ணீரை பருகிய மாணவிகள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 11:29.35 AM GMT ]
விஷ விதை தூள் கலந்திருந்த தண்ணீர் போத்தல்களில் இருந்த தண்ணீரை பருகிய மூன்று பாடசாலை மாணவிகள் ஆபத்தான நிலைமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை சேருவில் ஸ்ரீ நவவோதயா பாடசாலையில் 7 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அதே வகுப்பில் பயிலும் மாணவர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சர்வதேச பிடியாணை
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 11:16.56 AM GMT ]
ரெயின்ஸ்டார் கொமினிகேஷன் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய 32 லட்சம் அமெரிக்க டொலர்களை செலுத்தாது மோசடி செய்ததாக கூறப்படும் 4 அவுஸ்திரேலிய பிரஜைகளை கைது செய்ய சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை சர்வதேச பொலிஸாரின் ஊடாக கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
இந்த நிதி மோசடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, நீதிபதி ஷிரான் குணரட்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten