தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 augustus 2013

வாஸ் குணவர்தன மீது சகல குற்றங்களையும் சுமத்தி விட்டு அரசு தன்னைப் பாதுகாத்துள்ளது: ஸ்ரீநாத் பெரேரா!

புளியம்பொக்கணையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நாளை சமுர்த்தி வங்கித் திறப்பு விழா- பிரதேச மக்கள் சிறீதரன் எம்பியிடம் முறைப்பாடு
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 10:47.45 AM GMT ]
வடமாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயற்பாடாக நாளை கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த புளியம்பொக்கணைச் சந்தியில் சமுர்த்தி வங்கித் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்விற்கு அப்பிரதேச செயலர் பிரிவில் கடமையாற்றுகின்ற, சட்டப்படி அரசியலில் ஈடுபட முடியாத கிராம சேவையாளர்கள், திணைக்கள அதிகாரிகள் அனைவரும் அந்த நிகழ்விற்குக் கட்டாயமாக சமூகமளிக்க வேண்டுமென கண்டாவளைப் பிரதேச செயலாளர் ரி.முகுந்தன் உத்தரவிட்டுள்ளார்.
ஈ பி டீ பி இன் கிளிநொச்சி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் தனிப்பட்ட செயலாளர் போன்று செயலாற்றும் இவர், மாவட்ட எல்லை நிர்ணயக் குழுவில் ஈ.பி.டி.பி அணியின் சார்பாக அங்கம் வகிக்கும் ஒருவராவார்.
இவரது இந்த தன்னிச்சையான அடாவடித்தனமான செயற்பாடு குறித்து விசனமும் விரக்தியும் அடைந்த அப் பிரதேச மக்கள் இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் இவ்விடயத்தின் தன்மை குறித்து கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளான கஃபே, பவ்ரல் மற்றும் சீ.பி. ஏ ஆகியற்றுக்கு மேற்படி தேர்தல் விதிமுறைகளை மீறும் இவ் விடயம் குறித்து எழுத்து மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

வாஸ் குணவர்தன மீது சகல குற்றங்களையும் சுமத்தி விட்டு அரசு தன்னைப் பாதுகாத்துள்ளது: ஸ்ரீநாத் பெரேரா
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 10:58.25 AM GMT ]
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மீது சகல குற்றங்களையும் சுமத்தி விட்டு, அரசாங்கம் தன்னை தற்காத்து கொண்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஸ்ரீநாத் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மட்டும் நாட்டின் அதிகாரத்தை கையிலெடுத்து கொண்டு இவ்வாறு செயற்பட முடியுமா என்ற கேள்வி எழுகிறது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசாங்கத்திற்கு தாவவில்லை. ஜனாதிபதியுடன் ஏற்படுத்தி கொண்ட இணக்கத்திற்கு அமையவே அவர் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
நாட்டு மக்களை முட்டாள்களாக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திற்கு சென்றார்.
தயாசிறிக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு செல்லவில்லை. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பல்வேறு உத்திகளை பயன்படுத்தி அவர்களை ஆளும் கட்சியில் சேர்த்து கொண்டார்.
அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் கடுமையாக சட்டத்தை மீறி செயற்பட்டு வருகின்றனர். எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்தின் பிரபலம் குறைந்து போகும் அடையாளங்கள் தென்படுகின்றன என ஸ்ரீநாத் பெரேரா கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten