[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 12:59.20 AM GMT ]
வெடிப்பொருட்களை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த தண்டனை நேற்று விதிக்கப்பட்டுள்ளது.
கே கே நகர் திருச்சிராப்பள்ளி என்ற இடத்தில் உள்ள அகதி முகாமில் வசித்து வந்த இவர் சௌந்தரராஜன் என்ற பெயரைக்கொண்டவராவார்.
2012ம் ஆண்டு மார்ச் 18ம் திகதியன்று இவர் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.
இதன்போது இவர் வைத்திருந்த செய்மதி தொலைபேசி, டெட்டினேட்டர் குச்சிகள், ஜெலிக்னைட் குச்சிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றை இவர் இலங்கைக்கு கடத்தவிருந்தார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
அவிசாவளை, நூரி தோட்ட கொலை தொடர்பில் உரிய விசாரணை தேவை!– அமெரிக்கா வலியுறுத்தல்
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 01:07.38 AM GMT ]
இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
வோல்ட்டர்ஸ் பே என்ற அமெரிக்க நிறுவனமே இந்த தோட்டத்தின் முகாமையை மேற்கொண்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இந்த தோட்டத்தின் முகாமையாளர் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில் ஏற்கனவே இந்த தோட்டத்தில் பிரச்சினை குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் பொலிஸார் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten