[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:21.54 AM GMT ]
இலங்கை கடற்படையின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
இலங்கை கடற்படைக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ் சயூரா மீது விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இக்கப்பல் இராணுவத்திற்கு முக்கிய கருவியாக இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சரத் என்ற நபரிடம், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன பதினைந்து லட்ச ரூபா கப்பமாக பெற்றுக் கொண்டார் என புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் குற்றம் சுமத்தியுள்ளனர்.
2006ம் ஆண்டு நீர்கொழும்புக்கு அருகில் எஸ்.எல்.என்.எஸ் சயூரா கடற்படைக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
அத்துடன், குறித்த ஆறு முன்னாள் போராளிகளும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களில் புலிகளின் தலைவர்களுடன் சதி செய்ய திட்டம்ட தீட்டியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பில் 68 சாட்சியங்களும் 29 தடயப்பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சரத்திடம் வாஸ் குணவர்தன 15 லட்சம் கப்பமாக பெற்றார்: புலனாய்வுப் பிரிவு- தொடர்ந்தும் விளக்கமறியலில் வாஸ் குணவர்தன
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 02:35.38 AM GMT ]
களனி பிரதேச சபை உறுப்பினா ஹசித மடவல படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக சிங்கப்பூர் சரத் கருதப்படுகின்றார்.
சிங்கப்பூர் சரத்தை கொலை செய்யாமல் இருக்க 30 லட்ச ரூபா கப்பம் வழங்கப்பட வேண்டுமென வாஸ் குணவர்தன கோரியதாகவும், அதில் 14,80,000 ரூபா, பொரளை மற்றும் கொழும்பு டி.எப்.சீ.சீ வங்கி கிளைகளின் ஊடாக வாஸ் குணவர்தனவின் கணக்குகளுக்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்த வாஸ் குணவர்தனவை மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பம்பலப்பிட்டியைச் சேர்ந்த மொஹமட் சியாம் என்ற பிரபல வர்த்தகரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டின் அடிப்படையில் வாஸ் குணவர்தன தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தகர் ஷியாம் கொலை வழக்கு - வாஸ் குணவர்தன உட்பட 7 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை செய்யப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட 07 சந்தேக நபர்களை தொடர்ந்தும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொலை தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது, வாஸ் குணவர்தன உட்பட சந்தேக நபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
விசாரணை தொடர்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்த குற்றப்புலனாய்வு திணைக்களம், கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ள வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தனவை கைதுசெய்வதற்கான விசாரணைகளை நடத்தி வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் ஷியாம், வாஸ் குணவர்தன தலைமையில் இயங்கிய பொலிஸ் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten