[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 12:16.51 AM GMT ]
நேற்று ஆளும் கட்சியின் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் சுசில் பிரேமஜயந்த யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவில்லை என்றார்.
அதேவேளை, அமைச்சர் தெரிவிக்கின்ற வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட புலிகளின் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
குட்டி ஜப்பானாக வடக்கை மாற்றுவாராம் டக்ளஸ் தேவானந்தா
[ வியாழக்கிழமை, 01 ஓகஸ்ட் 2013, 12:02.44 AM GMT ]
வடமாகாண சபை தேர்தலின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த தேர்தலில் வென்றால் வடபகுதி மக்களின் வாழ்க்கையை இன்னும் பல மடங்கு உயர்த்துவதுடன், ஒரு சுதந்திரமான செயற்பாட்டினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இந்த தேர்தலில் வென்றால் வடபகுதி மக்களின் வாழ்க்கையை இன்னும் பல மடங்கு உயர்த்துவதுடன், ஒரு சுதந்திரமான செயற்பாட்டினை ஏற்படுத்த முடியுமென்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
எமது அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக, ஏற்கெனவே கூறப்பட்டு வந்த 13வது திருத்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், அதை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், காணி விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றேன். அமைச்சரவை மற்றும் படைத்தரப்பினருடன் கலந்துரையாடியுள்ளேன். அதன் விவகாரத்தை மீள் பரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கின்றார்கள்.
அந்தவகையில், எங்கள் மக்களின் காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்க முடியும் என்பதுடன் காணி விடுவிப்பதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் அவர் சொன்னார்.
மேலும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தீர்மானித்துக் கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten