தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

நவநீதம்பிள்ளை 30 ஆம் திகதி தமிழ்க்கூட்டமைப்பை சந்திக்கிறார்- கூட்டமைப்பிற்கு எதிராக நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு

இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தத் திட்டம்: பாகிஸ்தான் 9 பேருக்கு யாழ்ப்பாணத்தில் பயிற்சி
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:07.49 AM GMT ]
இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, யாழ்ப்பாணத்தில் பாகிஸ்தான் போராளிகள் பயிற்றப்படுவதாக இந்திய புலனாய்வு அறிக்கை ஒன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் லஸ்கர் ஈ தாய்பா அமைப்பைச் சேர்ந்த 9 போராளிகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இவ்வாறான 3 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
இந்த மாதம் நடுப்பகுதி வரையில், குறித்த போராளிகள் 9 பேரும் இடைக்கிடையில் பலதடவைகள் தமிழ் நாட்டுக்கு வந்து சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் இலங்கையின் கடவுச் சீட்டுகளை பயன்படுத்துவதுடன், சிங்கள மீனவர்களின் உதவிகளுடன் தமிழகத்துக்கு வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் மதுரை அல்லது மயிலாடு துறையை தாக்கக்ககூடும் என்று அதி முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் புலனாய்வு அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மேலும் 8 பேருக்கு பாகிஸ்தானில் வைத்து பயிற்சி வழங்கப்படுவதாகவும் இந்திய புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவநீதம்பிள்ளை 30 ஆம் திகதி தமிழ்க்கூட்டமைப்பை சந்திக்கிறார்- கூட்டமைப்பிற்கு எதிராக நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 02:14.27 AM GMT ]
இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இந்த மாதம் 30ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி இலங்கை வரவுள்ள நவநீதம் பிள்ளை 30ம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது,  வடமாகாணத்தில் நடைமுறையிலுள்ள அதிகரித்த இராணுவ துருப்பினரை வெளியேற்றுவது தொடர்பில் பேசப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், இன்னும் பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ளமை, கடத்தல் மற்றும் காணாமல் போனோர் சம்பந்தமான விடயங்கள் என்பன குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறையிடவுள்ளது என்று கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அரசாங்கம் முறைப்பாடு செய்ய உள்ளது.
எதிர்வரும் 25ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாகவும், அதனை நவனீதம்பிள்ளையிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வன்னியிலிருந்து மீட்கப்பட்ட வீடியோ ஆவணங்களில் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தைகள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

புலிகளின் உத்தரவிற்கு அமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் காணப்படுவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறைப்பாடு செய்ய உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச் செயல்கள் தொடர்பிலும் முறைப்பாடு செய்ய்ப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten